அடப்பாவி.. இதுக்காக வாடா கூட பொறந்த தம்பியை கொலை செய்த.. என்ன காரணம் நீங்களே பாருங்க.!

Published : Jun 23, 2022, 10:07 AM IST
அடப்பாவி.. இதுக்காக வாடா கூட பொறந்த தம்பியை கொலை செய்த.. என்ன காரணம் நீங்களே பாருங்க.!

சுருக்கம்

பெல்ட்டால் கழுத்தை இறுக்கி தம்பியை அண்ணனே கொடூரமாக கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அண்ணனை போலீசார் கைது செய்துள்ளனர்.

பெல்ட்டால் கழுத்தை இறுக்கி தம்பியை அண்ணனே கொடூரமாக கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அண்ணனை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை முகப்பேர் மேற்கு பகுதியை சேர்ந்தவர் ராசு(32). இவர் தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணமாகி கனகா என்ற மனைவியும், மகாலட்சுமி(5) என்ற மகளும் உள்ளனர். மகள் மகாலட்சுமி அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 1ம் வகுப்பு படித்து வருகிறார். ராசுவும் அவரது தம்பி சந்திரன்(எ) விக்கி(19)  ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர். இந்நிலையில், கூலி வேலை செய்து வரும் விக்கி நேற்று குடிபோதையில் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது அவரது அண்ணன் மகள் மகாலட்சுமி செல்போனில் விளையாடி கொண்டிருந்த போது செல்போனை பிடுங்கி சிறுமியை அடித்ததாக கூறப்படுகிறது. இதனால் சிறுமி அழுதபடி சென்று தந்தையிடம், ‘’சித்தப்பா என்னிடம் இருந்து செல்போனை பிடுங்கி அடித்துவிட்டார்’ என்று தெரிவித்துள்ளார். இதனால் கடும் கோபம் அடைந்த ராசு, விக்கியிடம் சென்று வாக்குவாதம் செய்துள்ளார்.

இதில் ஆத்திரம் அடைந்த ராசு, விக்கியை சரமாரியாக தாக்கியுள்ளார். அத்துடன் பெல்ட்டால் விக்கியின் கழுத்தை இறுக்கியபோது மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயங்கிவிழுந்துள்ளார். இதனால் பயந்துபோன ராசு அங்கிருந்து தப்பியோடிவிட்டார். இதன்பிறகு அக்கம்பக்கத்தினர் சென்று விக்கியை மீட்டு உடனடியாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே  இறந்துவிட்டதாக கூறினர். இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு விரைந்தனர். 

பின்னர், விக்கி உடலை  பிரேத பரிசோதனைக்காக அதே மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி ராசுவை கைது செய்தனர். இதுபற்றி தகவல் கிடைத்ததும் நொளம்பூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தனர். பின்னர் விக்கி  செல்போன் விவகாரத்தில் தம்பியை அண்ணன் கொலை செய்தது திருமங்கலம் பகுதியில் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

PREV
click me!

Recommended Stories

இரவு பகல் பாராமல் எந்நேரமும் ஓயாமல் டார்ச்சர்! அதிமுக பிரமுகரின் மகளை இதற்காக தான் கொன்றேன்!
இரண்டு குழந்தைகளின் தாய் செய்ற வேலையா இது.. பழைய காதலனுக்காக புருஷனை போட்டு தள்ளிய மனைவி