24 மணி நேரமும் போதை.. பெற்ற தாய் என்றும் பாராமல் அண்ணன் செய்த காரியம்.. கட்டையால் அடித்துக் கொன்ற தம்பி.

Published : Oct 19, 2021, 09:51 AM IST
24 மணி நேரமும் போதை.. பெற்ற தாய் என்றும் பாராமல் அண்ணன் செய்த காரியம்.. கட்டையால் அடித்துக் கொன்ற தம்பி.

சுருக்கம்

அப்போது தம்பி பிரகாஷ் அண்ணன் சிவராஜை தட்டிக் கேட்டார், இதனால் அவர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றவே இருவருக்கும் கைகலப்பு  ஏற்பட்டது, பிரகாசும் மது போதையில் இருந்ததால், ஆத்திரமடைந்த அவர் அருகில் இருந்த கட்டையால் அண்ணன் சிவராஜை  தலையில் பலமாக தாக்கினார். 

பெற்ற தாயிடம் குடிபோதையில் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்த அண்ணனை கட்டையால் அடித்து தம்பி கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கொலை, கொள்ளை உள்ளிட்ட சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. சட்டம் ஒழுங்கை கட்டுப்படுத்த காவல்துறையும் அரசும் எத்தனை முயற்சிகள் எடுத்தும் குற்றங்கள் குறைந்தபாடில்லை. பொதுவாகப் பெரும்பாலான குற்றங்களுக்கு மதுவே காரணமாக இருந்து வருகிறது என்பதை அனைவரும் அறிவர். 

இதையும் படியுங்கள்:  நடு ரோட்டில் உதவி ஆய்வாளரை அடித்து தூக்கிய கார்.. துடிதுடித்து உயிரிழப்பு.. கதிகலங்கிபோன காவல் துறை.

இந்த வரிசையில் சென்னை வில்லிவாக்கத்தில் குடிபோதையில் தாயிடம்  தகராறில் ஈடுபட்டு வந்த அண்ணனை தம்பி கட்டையால் அடித்துக் கொலை செய்துள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது. சென்னை வில்லிவாக்கம் பலராமபுரம் அறிஞர் அண்ணா தெருவை சேர்ந்தவர் சிவராஜ் (47) இவரது தாய் தனலட்சுமி வயது (67) சிவராஜ் மதுபோதைக்கு அடிமையானவர் ஆவார். எப்போதும் மதுபோதையில் இருந்துவந்த அவர், வீட்டுக்கு வந்து தாய் மற்றும் குடும்பத்தாரிடம் தகராறில் ஈடுபடுவது வழக்கம் இருந்தது. தன்னை தட்டிக் கேட்பவர்களிடத்திலும் அவர் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் நேற்று குடிபோதையில் வீட்டுக்கு வந்த சிவராஜ் வழக்கம்போல தன் தாயிடம் தகராறில் ஈடுபட்டார்.

இதையும் படியுங்கள்: தமிழக மக்களுக்கு பயங்கர எச்சரிக்கை.. குறிப்பா இந்த மாவட்ட மக்கள் அடுத்த 4 நாட்களுக்கு ரொம்ப உஷாரா இருங்க.

அப்போது தம்பி பிரகாஷ் அண்ணன் சிவராஜை தட்டிக் கேட்டார், இதனால் அவர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றவே இருவருக்கும் கைகலப்பு  ஏற்பட்டது, பிரகாசும் மது போதையில் இருந்ததால், ஆத்திரமடைந்த அவர் அருகில் இருந்த கட்டையால் அண்ணன் சிவராஜை  தலையில் பலமாக தாக்கினார். பலத்த காயமடைந்த சிவராஜ் நிலைகுலைந்து கீழே சரிந்து விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த வில்லிவாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து, பிரேதத்தை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அண்ணனை கட்டையால் அடித்துக் கொலை செய்த பிரகாஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மதுபோதையில் தம்பி அண்ணனை அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

PREV
click me!

Recommended Stories

ஏசி வாங்கி தராத காதல் கணவர்.! உயிரை மாய்துகொண்ட 25 வயது இளம்பெண்.! திருவள்ளூரில் நடந்த அதிர்ச்சி சம்பவம்.!
அப்பா.. என்னை காப்பாத்து.. தந்தையிடம் கதறிய 33 வயது சத்யா.. வெறியாட்டம் ஆடிய சக்திவேல்.. யார் இவர்?