நடு ரோட்டில் உதவி ஆய்வாளரை அடித்து தூக்கிய கார்.. துடிதுடித்து உயிரிழப்பு.. கதிகலங்கிபோன காவல் துறை.

Published : Oct 19, 2021, 09:16 AM ISTUpdated : Oct 19, 2021, 09:20 AM IST
நடு ரோட்டில் உதவி ஆய்வாளரை அடித்து தூக்கிய கார்.. துடிதுடித்து உயிரிழப்பு.. கதிகலங்கிபோன காவல் துறை.

சுருக்கம்

விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் பகுதியை சேர்ந்தவர் பிரசன்னா(26) இவர் சென்னை காமராஜர் சாலையில் உள்ள டிஜிபி அலுவலகத்தில் டெக்னிக்கல் பிரிவில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறார்,

சென்னையில் சாலையை கடக்க முயன்ற காவல் உதவி ஆய்வாளர் மீது வேகமாக வந்த கார் மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இது காவல்துறையினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்நிலையில், கார் ஓட்டுனரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் விபத்துக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது, சாலை விதிமுறைகளை முறையாக  கடைப்பிடிக்க வேண்டும், சிக்னல் விளக்குகளை மதித்து நடக்க வேண்டும், ஹெல்மெட் அணிய வேண்டும், சீட் பெல்ட் அணிய வேண்டும் என தொடர்ந்து போக்குவரத்து போலீசார் எச்சரித்து வரும் நிலையில், சாலை விதிமுறைகள் ஆங்காங்கே காற்றில் பறக்கவிடும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. 

இதையும் படியுங்கள்: தமிழக மக்களுக்கு பயங்கர எச்சரிக்கை.. குறிப்பா இந்த மாவட்ட மக்கள் அடுத்த 4 நாட்களுக்கு ரொம்ப உஷாரா இருங்க.

இந்த வரிசையில் சிக்னல் விளக்கையும் பின்பற்றாமல் வேகமாக வந்த கார் ஒன்று மோதியதில் காவல் உதவி ஆய்வாளர் சாலையிலேயே தூக்கி எறியப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ள கொடூரம் நடந்துள்ளது. விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் பகுதியை சேர்ந்தவர் பிரசன்னா(26) இவர் சென்னை காமராஜர் சாலையில் உள்ள டிஜிபி அலுவலகத்தில் டெக்னிக்கல் பிரிவில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறார், இந்நிலையில் நேற்று இரவு பணி முடிந்து டிஜிபி அலுவலகம் வெளியே உதவி ஆய்வாளர் பிரசன்னா சாலையை கடக்க முயன்றார். அப்போது சிக்னல் விளக்கையும் பின்பற்றாமல் அவ்வழியாக வேகமாக வந்த கார் ஒன்று உதவி ஆய்வாளர் பிரசன்னா மீது வேகமாக மோதியது,

இதையும் படியுங்கள்: விஜயபாஸ்கர் வீட்டு வாசலில் பரபரப்பு.. போலீசுடன் மோதிய அதிமுக வழக்கறிஞர் அணி.. அசைக்க முடியாது என சவால்.

அதில் அவர் தூக்கி வீசப்பட்டார், அதில் அவரது தலை சாலையில் மோதி  ரத்தவெள்ளத்தில் சுயநினைவு இழந்த அவரை அருகில் இருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக கூறினார். இதற்கிடையே விபத்து  ஏற்படுத்திய கார் ஓட்டுநரை அண்ணா சதுக்கம்  போக்குவரத்து புலனாய்வு போலீசார் கைது செய்து, காரை பறிமுதல் செய்ததுடன் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கார் மோதி நடு ரோட்டில் காவல் உதவி ஆய்வாளர் உயிரிழந்துள்ள சம்பவம் காவல் துறையினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 

PREV
click me!

Recommended Stories

தனியாக இருந்த மாணவியை மிரட்டி ஆபாச வீடியோ பதிவு.. மக்கள் போராட்டத்தால் ம.பி.யில் பதற்றம்!
என் பொண்ண வாரி கொடுத்துட்டு இருக்கேன்! உனக்கு உல்லா*சம் கேக்குதா! டார்ச்சர் கொடுத்த திமுக வழக்கறிஞர் கொ*லை!