கோவை மாவட்டம் மலுமிச்சம்பட்டி அவ்வை நகரை சேர்ந்தவர் சித்ரா (44). திமுகவை சேர்ந்த இவர் 3வது வார்டு கவுன்சிலராக உள்ளார். நேற்று இரவு வீட்டில் இருந்த போது திடீரென வந்த 5 பேர் கொண்ட மர்ம கும்பல், சித்ரா அவரது கணவர் ரவிக்குமார் (47), மகன் மோகன் (24) ஆகியோரை அரிவாளால் சராமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றனர்.
கோவையில் 3வது வார்டு திமுக பெண் கவுன்சிலர், அவரது கணவர், மகன் ஆகியோரை மர்ம கும்பல் அரிவாளால் வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் மலுமிச்சம்பட்டி அவ்வை நகரை சேர்ந்தவர் சித்ரா (44). திமுகவை சேர்ந்த இவர் 3வது வார்டு கவுன்சிலராக உள்ளார். நேற்று இரவு வீட்டில் இருந்த போது திடீரென வந்த 5 பேர் கொண்ட மர்ம கும்பல், சித்ரா அவரது கணவர் ரவிக்குமார் (47), மகன் மோகன் (24) ஆகியோரை அரிவாளால் சராமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றனர்.
இதையும் படிங்க;- உல்லாசத்துக்கு தடையாக இருந்த உன்னுடைய புருஷனை போட்டு தள்ளிட்டேன்!மனைவியின் ரியாக்சன் எப்படி இருந்தது தெரியுமா?
அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்த போது 3 பேரும் ரத்த வெள்ளத்தில் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்ததனர். பின்னர், ஆம்புலன்ஸ் மூலம் 3 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க;- சித்தியை கரெக்ட் செய்து உல்லாசம்! தடையாக இருந்த அத்தையின் கதையை முடித்த மருமகன்! நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு