மது அருந்துவதில் தகராறு; பெயிண்டர் வீடு புகுந்து வெட்டி கொலை - கொலையாளி போலீசில் சரண்

By Velmurugan s  |  First Published Aug 12, 2023, 6:43 AM IST

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே மது அருந்துவதில் ஏற்பட்ட தகராறில் பெயிண்டிங் தொழிலாளி வீடு புகுந்து வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அடுத்துள்ள  கீழ குமரேசபுரம் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் சரவணன்(வயது 48). இவர் பெயிண்டர் வேலை பார்த்து வந்தார். இவருக்கு சமுத்திரவள்ளி (45) என்ற மனைவியும், மூன்று மகள்களும் உள்ளனர். இந்நிலையில் முதல் மகள்  சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்திலும், இரண்டாவது மகள்  சென்னையில் தனியார் மருத்துவமனையில் செவிலியராகவும் வேலை பார்த்து வருகிறார்கள். மூன்றாவது மகள்  திருவெறும்பூர் ஐடியில் படித்து வருகிறார்.

இந்த நிலையில் சவுந்தரவள்ளி தனது மூன்றாவது மகளை அழைத்து கொண்டு சென்னையில் உள்ள மகள்களை பார்ப்பதற்காக  கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு சென்றுள்ளார். வீட்டில் யாரும் இல்லாத நிலையில் இன்று சரவணன் வீட்டிலேயே வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக திருவெறும்பூர் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

Tap to resize

Latest Videos

தாய்க்கு வலை விரித்து மகளையும் வளைத்துப்போட்ட காமுகன்; 4 பேருடன் உல்லாசம் இறுதியில் போக்கோவில் கைது

காவல் துறையினர் நடத்திய விசாரணையில் சௌந்தரவள்ளி எழில் நகர் பகுதியில் உள்ள ஒரு பந்தல் காண்ட்ராக்ட்டில் வேலை பார்த்து வருவதும், அதில் மேலாளராக உள்ள லால்குடியைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் நேற்று இரவு சரவணன் வீட்டிற்கு வந்து சரவணனுக்கு மது வாங்கி கொடுத்து குடிக்க வைத்துள்ளார். அப்படி குடிக்க வைத்ததும் இருவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த ராதாகிருஷ்ணன், சரவணனை சரமாரியாக வெட்டி படுகொலை செய்துள்ளதாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

தமிழக அரசின் கடன் குறித்து நிர்மலா சீதாராமன் கூறியது அனைத்தும் உண்மை தான் - அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

அதன் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் இன்று காலை ராதாகிருஷ்ணன் திருவெறும்பூர் காவல்துறையிடம்  சரணடைந்துள்ளார். தொடர்ந்து காவல்துறையினர்  அவரிடம் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

 

click me!