ஆவினில் தொடர்ந்து அரங்கேறும் அராஜகம்; வீடியோ மூலம் ஆதரவு திரட்டும் பெண்

By Dinesh TGFirst Published Sep 27, 2022, 9:19 PM IST
Highlights

மதுரையில் ஆவின் பெண் முகவரின் கையை வெட்டி விடுவேன் என்று திமுக பிரமுகர் விடுத்த கொலை மிரட்டல் தொடர்பான ஆடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

மதுரை மாநகர் சாத்தமங்கலம் பகுதியில் உள்ள ஆவின் நிறுவனத்தில் இருந்து நாள்தோறும் மாவட்டத்தில் உள்ள 47 ஆவின் பாலகங்கள் மற்றும் 390 டெப்போக்கள் மூலமாக மாதந்தோறும் 1.94இலட்சம் லிட்டர் பால் விநியோகம் செய்யப்பட்டுவருகிறது. இதற்கான பால் பாக்கெட்டுகளை விநியோகம் செய்ய ஒப்பந்த வாகனங்கள் மூலம் அந்தந்த டெப்போக்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது.

இந்நிலையில் மதுரை மாநகர் புதுவிளாங்குடி பகுதியில் உள்ள காயத்ரி  என்ற பெண் முகவருக்கு சொந்தமான ஆவின் டெப்போவில் பால் பாக்கெட்டுகளை நேரடியாக விநியோகம் செய்யாமல் அருகில் உள்ள பகுதிகளில் வந்து விநியோகம் செய்துள்ளனர். இது குறித்து கேட்டதற்கு சாலை பழுதடைந்துள்ளதாக வாகன ஒப்பந்ததாரர் கூறியுள்ளார். இதனையடுத்து பெண் முகவருக்கு சொந்தமான டெப்போவில் இருந்து பால் டப்பாக்காளை எடுத்துவந்து அருகில் உள்ள பகுதியில் வாகனத்தில் வந்து தருமாறு கேட்டுள்ளார். அப்போது பால் விநியோக வேலையில் இருப்பதால் நேரடியாக வந்து எடுத்துசெல்லுமாறு கூறிய நிலையில் 3 பால்டப்பாவை எடுத்துச்சென்றுள்ளனர்.

காவல் நிலையத்தில் தொடரும் சந்தேக மரணம்: திருச்சியில் பரபரப்பு

மீதியுள்ள பால் டப்பாக்களை டெப்போவிலயே போட்டுவிட்டு சென்றுள்ளனர். இதனையடுத்து பால் டப்பாக்களை தரவில்லை என கூறி வாகன ஒப்பந்ததாரர் நாகேந்திரன் பெண் முகவரை தொலைபேசியில் தொடர்புகொண்டு கேட்டுள்ளார். ஒப்பந்தபடி டெப்போவிற்கு வந்துதான் பால்டப்பாக்களை எடுத்துசெல்ல வேண்டும் என கூறியுள்ளார். அதற்கு பதிலளித்த ஒப்பந்ததாரர் நீ உங்க ஏரியா சாலையை சரிசெய்தால் தான் டெப்போக்கு வருவோம் என கூறியபோது அதனை ஆவின் கண்காணிப்பளரை சொல்ல சொல்லுங்கள் என பதிலளித்துள்ளார்.

பள்ளி பேருந்து மீது கார் மோதிய விபத்தில் ஒருவர் பலி; பரபரப்பான சிசிடிவி காட்சி

அப்போது பேசிய திமுகவை சேர்ந்த ஒப்பந்ததாரர் ஒழுங்கா பால் டப்பாக்களை ஒப்படைக்காவிட்டால் கையை வெட்டிவிடுவேன் என மிரட்டல் விடுத்துள்ளார். இந்த ஆடியோ தற்போது சமூகவலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை ஆவினில் திமுவை சேர்ந்த ஒப்பந்ததாரர்கள் அதிகாரிகளை மிரட்டுவது தொடங்கி பால் முகவர்களை மிரட்டுவது என அராஜகத்தில் ஈடுபடுவதாகவும், மேலும் பால்பாக்கெட்டுகளை கணக்கு காட்டாமல் எடுத்துசெல்வது போன்ற முறைகேடுகளும் அரங்கேறிவருகிறது. ஆவின் நிர்வாகத்தில் உள்ள முறைகேடுகளை தடுத்து அதிகாரிகளுக்கும், ஊழியர்களுக்கும் உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

click me!