5 மாத கர்ப்பிணிப் பெண்ணை தூக்கிச் சென்று கணவன் கண்ணெதிரில்.. 6 பேர் கும்பல் மாறி மாறி வன்புணர்வு...

Published : Sep 27, 2022, 07:10 PM IST
 5 மாத கர்ப்பிணிப் பெண்ணை  தூக்கிச் சென்று கணவன் கண்ணெதிரில்.. 6 பேர் கும்பல் மாறி மாறி வன்புணர்வு...

சுருக்கம்

கணவன் கண் எதிரில் கர்ப்பிணிப் பெண்ணை ஆறு பேர் கொண்ட கும்பல் பாலியல் வன்புணர்வு செய்துள்ள கொடுமை நடந்துள்ளது. இந்த விவகாரத்தில் போலீசார்4 பேரை கைது செய்துள்ளனர். 

கணவன் கண் எதிரில் கர்ப்பிணிப் பெண்ணை ஆறு பேர் கொண்ட கும்பல் பாலியல் வன்புணர்வு செய்துள்ள கொடுமை நடந்துள்ளது. இந்த விவகாரத்தில் போலீசார்4 பேரை கைது செய்துள்ளனர். இந்த கொடூரம் ஜார்க்கண்ட் மாநிலத்தில் அரங்கேறியுள்ளது. 

முழு விவரம் பின்வருமாறு:- ஜார்கண்ட் மாநிலம் பாலமு  மாவட்டம்  படான் பகுதியைச் சேர்ந்த இளைஞருக்கும், பக்கத்து மாவட்டத்தைச் சேர்ந்த பெண்ணுக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது. இந்நிலையில் அந்த இளம் பெண்ணுக்கும் கணவனுக்கும் இடையே சில தினங்களுக்கு முன்னர் தகராறு ஏற்பட்டது, அந்த இளம்பெண் கர்ப்பமாக இருந்தார், இதனால் மாமியார் வீட்டில் இருந்து கோபித்துக்கொண்டு 35 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள லதேஹர்  மாவட்டத்திலுள்ள மனிகா  என்ற கிராமத்தில் உள்ள தனது தந்தையின் வீட்டை நோக்கி சென்றார்.

இதையும் படியுங்கள்:  தன்னை ஆசைதீர அனுபவித்தவனை அலறவிட்ட விமான பணிப்பெண்.. அறையில் பூட்டிவைத்து எடுத்த ரிவென்ஜ்.

அப்போது அந்தப் பெண்ணை தேடி அவரது கணவர் இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்தார், இரவு 8 மணி அளவில் மனிக்கா தேசிய நெடுஞ்சாலையில் அந்தப் பெண் நடந்து சென்றுக்கொண்டிருப்பதை கணவர் கண்டார், அப்போது அந்த பெண்ணை வழிமறித்து தயவுசெய்து வீடு திரும்பி வந்துவிடுமாறு வற்புறுத்தினார், கதறினார்,ஆனால் அந்த பெண் கேட்கவே இல்லை, அப்போது அந்த வழியாக 6 பேர் கொண்ட கும்பல் இருசக்கர வாகனத்தில் அந்த பக்கம் வந்தது, சாலையில் இருட்டில் ஒரு ஆணும் பெண்ணும் தனியாக பேசிக் கொண்டிருப்பதை கண்டு அந்த கும்பல் அவர்களே விசாரித்தது.

இதையும் படியுங்கள்: காலில் விழுந்து கெஞ்சிய மனைவி, மாமியார்.. விடாமல்.. வீடு புகுந்து மனைவி கண்ணெதிரே பிரபல ரவுடி வெட்டி படுகொலை.!

பின்னர் கணவனை அந்த கும்பல் சரமாரியாக தாக்கியது, பின்னர் மனைவியை பகேரியா பலுவாஹி பள்ளத்தாக்கிற்கு தூக்கிச்சென்று, அந்த 6 பேர் கொண்ட கும்பல் மாறி மாறி பாலியல் வன்புணர்வு செய்தது, பின்னர் இரு சக்கர வாகனத்தில் கடத்த முயன்றது, அப்போது அந்த பெண் அலறல் சத்தம் கோட்டு பொதுமக்கள் அந்த கும்பலை விரட்டிதால் அந்த பெண்ணை அங்கேயே விட்டு அந்த கும்பல் தப்பி ஓடியது. இதனையடுத்து அங்கிருந்து பொதுமக்கள் அந்த பெண்ணை மருத்துவ மனையில் அனுமதித்தனர்.

இதனையடுத்து கணவன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்த நிலையில் அந்த4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர், அவர்களை கணவன் அடையாளம் காட்டினார், இந்நிலையில் போலீசார் மேலும் 2வரை தேடி வருகின்றனர். இந்நிலையில் ஆபத்தான முறையில் அந்தப் பெண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது .
 

PREV
click me!

Recommended Stories

Chennai Crime: ரயில் நிலையத்தில் சூட்கேஸில் தலையில்லாத சடலம்! கணவனை துண்டு துண்டாக வெட்டி கொன்றது ஏன்? சிக்கிய மனைவி பகீர்
Child Murder Case: ஒன்றரை வயது குழந்தை உயிரிழப்பில் திடீர் திருப்பம்.. 7 இடங்களில் எலும்பு முறிவு.. உடலில் 91 காயங்கள்.. அதிர்ச்சி தகவல்