+1 மாணவியை கர்ப்பமாக்கிய ‘திமுக’ பிரமுகர் மகன்.. போக்சோ சட்டத்தில் கைது! அதிர்ச்சி சம்பவம் !

By Raghupati R  |  First Published May 22, 2022, 11:43 AM IST

7 மாத கர்ப்பம் என்பதால் அவர்களால், மருத்துவர்களால் எதுவும் செய்ய முடியாத சூழ்நிலை.  இதனால் மாணவியின் பெற்றோர் வள்ளியூர் அனைத்து மகளிர் காவல் வெங்கடேஷ் மீது புகார் அளித்தனர். 


திருநெல்வேலி மாவட்டத்தில் ராதாபுரம் அடுத்த சௌந்திராபாண்டியபுரம்.  இங்கு ஊராட்சி தலைவராக இருப்பவர் முருகேன்.   திமுக பிரமுகரான முருகேசன் மகன் வெங்கடேஷ். 23 வயதான வெங்கடேசன் 9ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார். இவர் ஐ.டி.ஐ படித்து விட்டு மின்வாரியத்தில் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்து வருகிறார்.  சௌந்திரபாண்டியபுரத்திற்கு பக்கத்து கிராமத்தை சேர்ந்த பதினைந்து வயது பிளஸ்-1 மாணவியுடன் வெங்கடேஷ் பழகி வந்திருக்கிறார்.  

Tap to resize

Latest Videos

அந்த மாணவியை காதலிப்பதாக சொல்லி பழகி வந்திருக்கிறார். அந்த மாணவியிடம் ஆசை வார்த்தை பேசி தனிமையிலும் சந்தித்திருக்கிறார். அந்த மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அந்த மாணவி கர்ப்பம் அடைந்தார். அவர் தற்போது 7 மாத கர்ப்பிணியாக உள்ளார். இந்த விபரம் மாணவியின் பெற்றோருக்கு தெரியவரவும், அவர்கள் அதிர்ந்து போயிருக்கிறார்கள். 

7 மாத கர்ப்பம் என்பதால் அவர்களால், மருத்துவர்களால் எதுவும் செய்ய முடியாத சூழ்நிலை.  இதனால் மாணவியின் பெற்றோர் வள்ளியூர் அனைத்து மகளிர் காவல் வெங்கடேஷ் மீது புகார் அளித்தனர். அதன்பேரில், போலீசார் விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, வெங்கடேசை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திமுக பிரமுகர் மகன் போக்சோவில் சிறையில் அடைக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இதையும் படிங்க : அண்ணன் மனைவிக்கு தம்பி பாலியல் தொல்லை..’ஓகே’ சொன்ன அண்ணண் - உண்மையில் நடந்த ‘வாலி’ சம்பவம்

இதையும் படிங்க : பெட்ரோல் முதல் சிலிண்டர் மானியம் வரை.. அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட மத்திய அரசு ! என்ன காரணம் ?

click me!