மணமகனின் இளைய சகோதரர், நடிகர் அஜித்தின் ’வாலி’ திரைப்படத்தில் வருவதுபோல, தனது சகோதரனின் மனைவியை உருவ ஒற்றுமையைப் பயன்படுத்தி அடிக்கடி பாலியல் வன்புணர்வு செய்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம் லத்தூர் மாவட்டத்திலுள்ள ரிங் ரோடு பகுதியில் வசித்து வரும் இளைஞர் ஒருவருக்கும் 20 வயதுடைய இளம்பெண்ணிற்கும் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. மணமகனுக்கு இளைய சகோதரர் உள்ளார். இவர்கள் இருவரும் இரட்டை சகோதரர்கள். இதனால் வீட்டிற்கு வந்த 20 வயது மணமகள் கணவருக்கும் கணவரின் சகோதரருக்கும் உள்ள வித்தியாசம் புரியாமல் தவித்துள்ளார். இதனைப் பயன்படுத்திக் கொண்ட மணமகனின் இளைய சகோதரர், நடிகர் அஜித்தின் ’வாலி’ திரைப்படத்தில் வருவதுபோல, தனது சகோதரனின் மனைவியை உருவ ஒற்றுமையைப் பயன்படுத்தி அடிக்கடி பாலியல் வன்புணர்வு செய்துள்ளார்.
இதனை அறியாத அந்த இளம்பெண்ணும், இதனைக் கண்டுகொள்ள வில்லை. இச்சம்பவம் அப்பெண்ணிற்கு ஆறு மாதங்களுக்குப் பின்னர் தெரியவரவே, உடனடியாக இதுகுறித்து தனது கணவரிடம் தெரிவிக்கிறார். இதனைக் கேட்ட கணவர் சிறிதும் அதிர்ச்சியடையாமல், தொடர்ந்து தனது சகோதரரின் ஆசைக்கு இணங்க கூறியுள்ளார். இதனால் அந்த இளம்பெண் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இச்சம்பவம் குடும்பத்தினருக்கு தெரியவரவே அவர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதன் பிறகு, பாதிக்கப்பட்ட பெண் தனது தாய் வீட்டிற்குச்சென்றுவிடுகிறார். பின்னர் பெண்ணின் குடும்பத்தினருக்கு இந்த விவகாரம் தெரியவரவே, உடனடியாக இது குறித்து அவர்கள் சிவாஜிநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், இரட்டை சகோதரர்களை காவல் துறையினர் கைது செய்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.