
அசாம் மாநிலத்தின் நாகோன் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையத்திற்கு தீ வைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. காவல் நிலையத்தில் விசாரணையின் போது நபர் ஒருவர் உயிரிழந்ததை அடுத்து இந்த சம்பவம் நடைபெற்றதை அடுத்து கோபமுற்ற மக்கள் ஒன்றுகூடி காவல் நிலையத்திற்கு தீ வைத்தனர். இந்த சம்பவத்தில் மூன்று பேர் காயமுற்றனர். காவல் நிலையத்திற்கு தீ வைக்கப்பட்ட சம்பவத்தில் மூன்று பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
முன்னதாக பாட்டாடிராவா காவல் நிலையத்தை சேர்ந்த அதிகாரிகள் சகிபுல் இஸ்லாம் என்ற நபரை காவல் நிலையம் அழைத்து சென்றனர். மேலும் அவரை விடுவிக்க ரூ. 10 ஆயிரம் ரொக்கம் மற்றும் வாத்தை லஞ்சமாக கொடுக்க வலியுறுத்தியதாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.
மேலும் கைது செய்யப்பட்ட சகிபுல் இஸ்லாம் காவல் நிலையத்தில் உயிரிழந்து விட்டதாக பொது மக்கள் குற்றம் சாட்டி உள்ளனர். கைது செய்யப்பட்ட சகிபுல் இஸ்லாமின் குடும்பத்தார் காவல் நிலையம் சென்றுள்ளனர். காவல் நிலையத்தில், சகிபுல் இஸ்லாமிற்கு உடல் நிலை மோசமானது, என்றும் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார் என போலீசார் தெரிவித்து உள்ளனர்.
உயிரிழப்பு:
இதை அடுத்து சகிபுல் இஸ்லாம் குடும்பத்தார் மருத்துவமனை விரைந்தனர். அங்கு சகிபுல் இஸ்லாம் உயிரிழந்து விட்டதாக மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். மேலும் அவரின் உடல் சவக்கிடங்கில் வைக்கப்பட்டு உள்ளதாக அவர்கள் தெரிவித்து உள்ளனர்.
சகிபுல் இஸ்லாம் உயிரிழந்ததை அடுத்து பொது மக்கள் ஒன்று கூடி காவல் நிலையத்திற்கு சென்றனர். அங்கு காவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதம் முற்றியதை அடுத்து பொது மக்கள் காவல் நிலையத்தை சூரையாடி, தீ வைத்தனர்.