நீ முஸ்லிமா ? என கேட்டு நடுரோட்டில் தாக்கப்பட்ட முதியவர் உயிரிழப்பு... பா.ஜ.க. பிரமுகர் கைது..!

By Kevin KaarkiFirst Published May 22, 2022, 10:57 AM IST
Highlights

முதியவரை தாக்கி கொன்ற நபர் பா.ஜ.க. பிரமுகர் தினேஷ் குஷ்வாஹா என கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இவரின் மனைவி முன்னாள் பா.ஜ.க. கவுன்சிலர் ஆவார். 

மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த பா.ஜ.க. பிரமுகர் வயதான முதியவரை தாக்கும் வீடியோக்கள் சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரல் ஆகின. பொது மக்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பை பெற்ற இந்த சம்பவத்தில் தாக்கப்பட்ட முதியவர் உயிரிழந்து விட்டார். உயிரிழந்த முதியவர் மன நலம் பாதிக்கப்பட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

முதியவரை தாக்கி கொன்ற நபர் பா.ஜ.க. பிரமுகர் தினேஷ் குஷ்வாஹா என கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இவரின் மனைவி முன்னாள் பா.ஜ.க. கவுன்சிலர் ஆவார். மத்திய பிரதேச மாநிலத்தின் உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஷ்ரா கொலை செய்த தினேஷ் குஷ்வாஹா மீது நீமுச் மாவட்ட காவல் நிலையத்தில் கொலை குற்றம் செய்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது என தெரிவித்து இருக்கிறார்.

உயிரிழப்பு:

உயிரிழந்த முதியவர் பன்வர்லால் ஜெயின். இவர் ராட்லம் மாவட்டத்தின் சார்சி பகுதியை சேர்ந்த பன்வர்லால் ஜெயின் ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற கலாச்சார நிகழ்வில் கலந்து கொள்ள பன்வர்லால் ஜெயின் சென்றார். இதை அடுத்து மே 15 ஆம் தேதி அவர் காணாமல் போனார். பன்வர்லால் ஜெயின் காணாமல் போனதாக அவரது குடும்பத்தார் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் காவல் துறையினர் பன்வர்லால் ஜெயின் புகைப்படத்தை அனுப்பி, தேடுதல் வேட்டையை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில், தான் இவரின் உடல் நீமுச் மாவட்டத்தின் சாலை ஓரமாக பன்வர்லால் ஜெயின் சடலம் கண்டெடுக்கப்பட்டு இருக்கிறது. சடலத்தை கைப்பற்றிய போலீசார் அதனை அவரின் குடும்பத்தாரிடம் ஒப்படைத்தனர்.  

வைரல் வீடியோ:

முன்னதாக சமூக வலைதளத்தில் வைரல் ஆன வீடியோவில் தினேஷ் குஷ்வாஹா, முதியவரிடம், “உனது பெயர் முகமதா?” என்று கேட்டப்படி தொடர்ச்சியாக அடித்துக் கொண்டே இருந்தார். தினேஷ் குஷ்வாஹா தொடர்ச்சியாக தாக்கிக் கொண்டே இருந்ததை அடுத்து, தடுமாறிய பன்வர்லால் பதில் அளிக்க திணறினார். எனினும், தினேஷ் குஷ்வாஹா தொடர்ந்து முதியவரை கண்ணத்தில் அரைந்து கொண்டே  இருந்தார். மேலும் “உனது பெயரை சரியாக சொல், உன்னுடைய ஆதார் அட்டையை கொடு” என கேட்டுக் கொண்டு இருந்தார். 

65 வயதான முதியவர் தான் எந்த நிலைமையில் இருக்கிறோம் என்பதை புரிந்து கொள்ள சிரமப்படுகிறார். முதியவர் தாக்கப்படும் வீடியோ வைரல் ஆனதும், பன்வர்லால் ஜெயின் குடும்பத்தார், காவல் நிலையம் விரைந்து சென்று குஷ்வாஹா உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தினர். வைரல் ஆன வீடியோ வியாழன் கிழமை அன்று எடுக்கப்பட்டு இருக்கிறது என தினேஷ் குஷ்வாஹா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருக்கும் காவல் நிலையத்தை சேர்ந்த போலீஸ் அதிகாரி கே.எல். டங்கி தெரிவித்தார்.

click me!