பட்டப்பகலில் திமுக பிரமுகர் வெட்டி படுகொலை.. வெளியான பகீர் காரணம்.. பெண்ணை தீவிரமாக தேடும் போலீஸ்..!

Published : Sep 20, 2022, 07:14 AM ISTUpdated : Sep 20, 2022, 07:17 AM IST
பட்டப்பகலில் திமுக பிரமுகர் வெட்டி படுகொலை.. வெளியான பகீர் காரணம்.. பெண்ணை தீவிரமாக தேடும் போலீஸ்..!

சுருக்கம்

பட்டப்பகலில் திமுக வார்டு உறுப்பினர் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. 

பட்டப்பகலில் திமுக வார்டு உறுப்பினர் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. 

காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை அடுத்த நடுவீரப்பட்டு எட்டையபுரம் எட்டியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சதீஷ் (31). இவர், நடுவீரப்பட்டு 7-வது வார்டு உறுப்பினராகவும், திமுக வார்டு செயலாளராகவும் பதவி வகித்து வந்தார். இந்நிலையில், நேற்று மதியம் அதே தெருவில் உள்ள லோகேஷ்வரி என்பவரின் வீட்டு வாசலில் சதீஷ் தலை, மார்பு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வெட்டு காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்தார். 

இதையும் படிங்க;- புருஷனை கழற்றிவிட்டு 2 கள்ளக்காதலனை க்ரெக்ட் செய்த பெண்! உல்லாசத்திற்காக போட்டா போட்டி! இறுதியில் நடந்த பகீர்

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் உடனே சோமங்கலம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சதீஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் சதீஷ் வீட்டின் அருகில் வசித்து வருபவர் எஸ்தர் (எ) லோகேஸ்வரி (30), பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்து வந்துள்ளார். மேலும், வீட்டில் மதுபானங்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்துள்ளார்.

இதுதொடர்பாக சதீஷ் சோமங்கலம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார். இதனால், இருவருக்கும் கடந்த பல மாதங்களாக முன் விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில், சதீஷை சமாதானம் பேசுவதாக எஸ்தர் வரவழைத்து அடியாட்கள் உதவியுடன் வீட்டில் வைத்து கொலை செய்துள்ளனர். பின்னர் அவரது உடலை வெளியில் இழுத்து வந்து சாலையில் போட்டு விட்டு தப்பி ஓடி விட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக சோமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து லோகேஷ்வரியை தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க;-  எந்நேரமும் ஓயாமல் ஆண் நண்பருடன் செல்போனில் கடலை.. கடுப்பான கணவர்.. கழுத்தை கரகரவென அறுத்த பயங்கரம்.!

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

முதலிரவில் அதிர்ச்சி.. திருமணமான 3 நாளில் விவாகரத்து கேட்ட புதுப்பெண்! நடந்தது என்ன?
ஆண்ட்டியின் அழகில் மயங்கிய கொரியர் ஊழியர்.. ரவுடியின் மனைவிக்கு விடாமல் காதல் மெசேஜ்.. இறுதியில் நடந்த அதிர்ச்சி