நாயின் கழுத்தில் கயிறு கட்டி , அதை காரில் கட்டி.. வேகமாக ஓட்டிச் சென்று கொடூரம் செய்த டாக்டர் ..

By Ezhilarasan Babu  |  First Published Sep 19, 2022, 8:30 PM IST

நாயை காரில் கட்டி இழுத்துச்சென்று கொடுமைப்படுத்திய மருத்துவரை போலீசார் கைது செய்துள்ளனர். இக்கொடுமை தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரல் ஆன நிலையில் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 


நாயை காரில் கட்டி இழுத்துச்சென்று கொடுமைப்படுத்திய மருத்துவரை போலீசார் கைது செய்துள்ளனர். இக்கொடுமை தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரல் ஆன நிலையில் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் இச்சம்பவம் நடந்துள்ளது.

பொதுவாக விலங்கினங்கள் என்றாலே ஒருவிய அலட்சியமும் துன்புறுத்தும் சம்பவங்கள் பரவலாக அரங்கேறி வருகிறது. அதிலும் செல்லப்பிராணிகளாக கருதப்படும் நாய், பூனை போன்ற விலங்குகள் பல இடங்களில் கல்லால் அடிப்பது, கட்டிப் போட்டு  துன்புறுத்துவது போன்ற சம்பவங்கள் ஆங்காங்கே நடந்து வருகிறது.  சில நேரங்களில் இதுபோன்ற சம்பவங்கள் வீடியோவாக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த வரிசையில் ராஜஸ்தான் மாநிலத்தில் மருத்துவர் ஒருவர்  நாயை தனது காரில் கட்டி இழுத்துச் சென்றுள்ள கொடுமை நடந்துள்ளது.

Latest Videos

இதையும் படியுங்கள்: வேலைக்கு போன மகாலட்சுமி மீது பாலியல் இச்சை.. படுக்கைக்கு அழைத்து டார்ச்சர்.. 2 குழந்தைகளை விட்டு தீக்குளிப்பு.

முழு விபரம் பின்வருமாறு:- ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் மாவட்டத்தில் வாசிக்கும் மருத்துவர் ஒருவர் தனது காரில் நாய் ஒன்றை கட்டி அதை இழுத்துச் சென்றுள்ளார் அந்த நாய் கட்டப்பட்டிருந்ததால் அது காரின் பின்னாலேயே ஓடியுள்ளது. இந்த காட்சியை பார்த்த உள்ளூர் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர், பின்னர் இருசக்கர வாகனத்தில் சென்றவாரு வீடியோ எடுத்தனர். பிறகு அந்தக் காரை நிறுத்துமாறு விரட்டிச் சென்றனர், ஆனால் அந்த மருத்துவர் அதைப் பொருட்படுத்தாமல் காரை வேகமாக இயக்கியுள்ளார். ஆனால் பின்னாலேயே இருச்சக்கர வாகனத்தில் சென்றவர்கள் அந்த காரை வழிமறித்து காரில் கட்டப்பட்டிருந்த நாயை அவிழ்த்து விட்டனர்.

இதையும் படியுங்கள்: ரேசன் அரிசியை கடத்தி கள்ளச்சந்தையில் விற்பனை… ஒரு வாரத்தில் 174 பேர் கைது… 54 வாகனங்கள் பறிமுதல்!!

அதில் காயமடைந்த நாயை ஆம்புலன்ஸ் ஒன்றில் சிகிச்சைக்காகவும் அனுப்பி வைத்தனர். பின்னர் இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது, போலீசார் நடத்திய விசாரணையில் அந்த டாக்டரின் பெயர் ரஜ்னிஷ் கால்வா என்பது தெரியவந்தது. அவரிடம் விசாரித்ததில் தனது வீட்டின் அருகே ஒரு தெருநாய் வசித்து வந்தது அந்த நாயின் தொல்லை தாங்க முடியாததால், அந்த நாயை அப்புறப்படுத்த முயற்சித்தேன் என அவர் கூறியுள்ளார். மேலும் அவர் மீது தொண்டு அமைப்பு ஒன்று கொடுத்த புகாரின் அடிப்படையில் விளங்குவதை சட்டத்தின்கீழ் மருத்துவர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்துள்ளனர். 
 

click me!