டெல்லியில் நடந்தது போன்றே வங்கதேசத்திலும் இளம் பெண்ணை காதலித்து துண்டு துண்டாக வெட்டி வீசி இருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வங்கதேசத்தை சேர்ந்த அபு பக்கர் என்பவர் கவிதா ராணியை காதலித்து வந்துள்ளார். கடந்த நவம்பர் 6ஆம் தேதியில் இருந்து அபு பக்கரை காணவில்லை. போனிலும் தொடர்பு கொள்ள முடியவில்லை. அபு பக்கர் பணியாற்றி வந்த நிறுவனத்தின் உரிமையாளர் அவரை தேடி அவர் குடியிருக்கும் வாடகை வீட்டுக்கு ஆள் அனுப்பி உள்ளார். வீட்டின் வெளியே தாள் போடப்பட்டு இருந்துள்ளது. இதையடுத்து சந்தேகம் வலுக்க வீட்டின் உரிமையாளர் போலீசில் புகார் அளித்துள்ளார்.
விரைந்து வந்து வீட்டுக் கதவை திறந்த போலீசாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. தலையில்லாமல் ஒரு பெண்ணின் உடல் பெட்டியிலும், தலை பாலிதீன் கவரில் கட்டி தனியாகவும் வைக்கப்பட்டுள்ளது. கைகளை காணவில்லை. விசாரணையில் காளிபாட் பச்சர் என்பவரின் மகள் கவிதா ராணி என்பது தெரிய வந்துள்ளது.
undefined
இதையடுத்து போலீசார் கடந்த 7ஆம் தேதி அபு பக்கரையும் அவருடன் திருமணம் செய்யாமல் வசித்து வந்த சப்னா என்பவரையும் கைது செய்தனர். இவர்கள் இரண்டு பேரும் திருமணம் செய்து கொள்ளாமல் கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக கோபர்சாகா ஸ்கொயரில் ஒன்றாக வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளனர் என்று போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
கொலை செய்வதற்கு ஐந்து நாட்களுக்கு முன்புதான் அபு பக்கருடன் கவிதா நெருங்கி பழகி இருக்கிறார். இந்த நிலையில்தான் கவிதாவை பல துண்டுகளாக அபு பக்கர் வெட்டியுள்ளார். கடந்த நவம்பர் 5ஆம் தேதி தனது வாடகை வீட்டுக்கு கவிதாவை அபு பக்கர் அழைத்து வந்துள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த அபு பக்கர் கவிதாவின் கழுத்தை நெறித்துக் கொன்றுள்ளார். தலையை தனியாகவும், கைகளை தனியாகவும் வெட்டியுள்ளார். கைகளை அங்கே இருக்கும் கால்வாயில் வீசி எறிந்துள்ளார். தலையை பாலிதீன் கவரில் வைத்து விட்டு, உடலை அங்கே இருந்த பெட்டி ஒன்றில் போட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.
நாட்டையே அதிர வைத்த பயங்கர கொலை வழக்குகள்..!
இதையடுத்து தனது மற்றொரு காதலியான சப்னாவுடன் ருப்சா ஆற்றைக் கடந்து டாக்காவுக்கு அபு பக்கர் தப்பிச் சென்றுள்ளார். போலீசாருக்கு புகார் வந்ததையடுத்து தீவிர விசாரணைக்குப் பின்னர் கவிதாவின் உடலை கண்டறிந்தனர். பின்னர் காசிபூர் மாவட்டத்தில் அபு பக்கர் மற்றும் அவரது காதலி சப்னாவை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் கொலை செய்ததை அபு பக்கர் ஒப்புக் கொண்டுள்ளார்.