காரைக்கால் நடன கலைஞர் துபாயில் மர்ம மரணம்; ஆட்சியரிடம் கோரிக்கை

Published : Feb 27, 2023, 01:14 PM ISTUpdated : Feb 27, 2023, 01:15 PM IST
காரைக்கால் நடன கலைஞர் துபாயில் மர்ம மரணம்; ஆட்சியரிடம் கோரிக்கை

சுருக்கம்

துபாயில் கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருமானம் ஈட்டி வந்த காரைக்கால் பெண் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் உறவினர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

காரைக்கால் மாவட்டம் கீழகாசாகுடி கிராமத்தை சேர்ந்தவர் தேவதாஸ். இவருக்கு 4 மகள்கள். இதில் 2வது மகள் அருணா (வயது32). இவருக்கு ஜேகவா என்பவருடன் திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர். இந்தநிலையில் அருணா உள்ளிட்ட மற்ற சகோதரிகள் உள்ளூர் மற்றும் வெளியூர்களுக்கு சென்று கலை நிகழ்ச்சிகளில் நடனமாடி வந்தனர். 

சென்னையைச் சேர்ந்த தனியார் அமைப்பு மூலம், அங்குள்ள நடனப்பெண்களுடன் அருணா கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடன நிகழ்ச்சிக்காக துபாய் சென்றார். தொடர்ந்து அங்கு பல்வேறு கலை நிகழ்ச்சிகளில் நடனமாடி வந்தார். இதற்கிடையே தினசரி காரைக்காலில் உள்ள தனது குழந்தை மற்றும் உறவினர்களுடன் பேசிவந்தார். அதன்படி கடந்த 23ம் தேதி வரை அருணா தனது குடும்பத்தினருடன் பேசிவந்ததாக கூறப்படுகிறது. 

இந்தநிலையில் 24ம் தேதி அதிகாலை 3 மணிக்கு அருணாவுடன் சென்றிருந்த அவரது தோழிகள் சிலர், அருணா உடல் நிலை சரியில்லாமல் திடீரென இறந்து விட்டதாக அவரது தந்தை மற்றும் கணவருக்கு தொலைபேசியில் தகவல் தெரிவித்தனர். 

கொலையில் முடிந்த பெண்களின் குழாயடி சண்டை; ஒருவர் கைது

இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அருணாவின் உறவினர்கள், அருணாவை துபாய்க்கு அனுப்பி வைத்த சென்னை தனியார் அமைப்புடன் தொடர்பு கொண்டு கேட்டுள்ளனர். அப்போது சரியான பதில் கிடைக்கவில்லையென தெரிகிறது. இதையடுத்து அருணாவின் தந்தை மற்றும் சகோதரிகள், காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று மர்மமான முறையில் உயிரிழந்த அருணாவின் உடலை துபாயில் இருந்து மீட்டு, இந்திய தூதரகம் சார்பில் உடற்கூறு ஆய்வு செய்து காரைக்கால் கொண்டு வந்து ஒப்படைக்க வேண்டும் என மனு அளித்தனர். 

திருச்சி அருகே பயங்கரம்; தொப்புள் கொடிகூட அறுக்கப்படாத குழந்தை குப்பையில் வீச்சு

4துபாய்க்கு கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்று நடனமாடி வந்த பெண் கலைஞர் மர்மமான முறையில் இறந்த சம்பவம் காரைக்காலில் சோகத்தை ஏற்படுத்தியது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

நான் உனக்கு போதாதா! என் பொண்ணு கேக்குதா.. ஆத்திரத்தில் 46 வயது ஆன்டி.. அலறிய சூர்ய பிரதாப் சிங்
சார்.. நான் உங்க ஸ்டூடண்ட்ஸ்.! இப்படியெல்லாம் பண்ணாதீங்க! எவ்வளவு சொல்லியும் கேட்காத ஆசிரியருக்கு செருப்பு மாலை