இவர்களது காதல் பெண்ணின் பெற்றோருக்கு தெரியவந்ததை அடுத்து, இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து, மகளுக்கு அவசரம் அவசரமாக ஐதராபாத்தில் சாப்ட்வேர் இன்ஜினியருடன் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து வைத்தார்.
திருமணமான 2 ஆண்டில் கணவருடன் செல்ல மறுத்து கள்ளக்காதலனுடன் வாழ முடிவு செய்த இளம்பெண்ணை தந்தை கொடூரமாக கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் தேவேந்திரா. இவரது மூத்த மகள் பிரசன்னா (21). இவர், அதே ஊரை சேர்ந்த இளைஞரை காதலித்து வந்துள்ளார். இவர்களது காதல் பெண்ணின் பெற்றோருக்கு தெரியவந்ததை அடுத்து, இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து, மகளுக்கு அவசரம் அவசரமாக ஐதராபாத்தில் சாப்ட்வேர் இன்ஜினியருடன் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து வைத்தார்.
இதையும் படிங்க;- நண்பர்களை நம்பி வீட்டுக்கு போன தோழி.. மது கொடுத்து என்னை மட்டையாக்கி இரவு முழுவதும் கூட்டு பலாத்காரம்..!
இதனையடுத்து, ஐதராபாத்தில் கணவருடன் சந்தோஷமாக இருந்து வந்தார். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிரச்சன்னா சொந்த ஊருக்கு வந்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக திடீரென முன்னாள் காதலனை சந்தித்துள்ளார். பழைய நினைவுகளை பகிர்ந்து இருவரும் காதலை மீண்டும் வளர்த்துள்ளனர். தனிமையில் இருவரும் அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.
இதையும் படிங்க;- என் புருஷன் உயிரோடு இருக்கிற வரைக்கும் நம்ம ஒன்னு சேர முடியாது.. அசால்டா போட்டு தள்ளிவிட்டு நாடகமாடிய மனைவி.!
இந்நிலையில், கணவர் வந்து அழைத்தபோதும் பிரசன்னா செல்ல மறுத்துள்ளார். இதையறிந்த தேவேந்திரா, தனது மகளுக்கு அறிவுரை கூறி கணவருடன் செல்லும்படி கூறியுள்ளார். ஆனால் இதை ஏற்க அவர் மறுத்துவிட்டார். இதனால், ஆத்திரமடைந்த தந்தை பெற்ற மகள் என்று கூட பாராமல் தலையை துண்டித்து கொடூரமாக கொலை செய்தார். இந்த சம்பவம் தொடர்பாக மகளை கொலை செய்த தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.