கோவையில் குடும்ப தகராறில் மனைவியின் தம்பியை குடிபோதையில் குத்தி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவை மாவட்டம் இடையார்பாளையம் அடுத்துள்ள கோவில்மேடு சபேதார் 2வது வீதியில் தனது தாயார் வேலம்மாளுடன் வசிப்பவர் மணிகண்டன். இவர் மர வேலை செய்து வருகிறார். இவருக்கு தங்கமாரி மற்றும் செல்வி என 2 அக்காள்கள் உள்ளனர். மணிகண்டனுக்கு ஏற்கனவே குடி பழக்கம் இருந்துள்ளது. இந்த நிலையில் கடந்த 21ம் தேதி வேலாண்டிபாளையம் சின்னண்ணன் செட்டியார் வீதியில் வசிக்கும் தங்கமாரியை அவரது கணவர் ஐயப்பன் அடித்ததாக கூறப்படுகிறது.
இதனை மனதில் வைத்துக்கொண்டு 23ம் தேதி மணிகண்டன் குடிபோதையில் தங்கமாரி வீட்டிற்கு சென்று ஐயப்பனை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். இது தொடர்பான பிரச்சினையில் இரும்பு கம்பியால் மணிகண்டனின் நெற்றியில் அடித்தும், வலது மார்பு, உள்ளிட்ட பகுதிகளில் கம்பியால் குத்தி விட்டு அங்கிருந்து கணுவாய் திருவள்ளுவர் நகரில் உள்ள அவரது அம்மா வீட்டுக்கு சென்று விட்டார்.
திருச்சி அருகே பயங்கரம்; தொப்புள் கொடிகூட அறுக்கப்படாத குழந்தை குப்பையில் வீச்சு
இதனைத் தொடர்ந்து மணிகண்டனின் அம்மா வீட்டுக்கு சென்று பார்த்த போது மணிகண்டன் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்துள்ளார். இதுகுறித்த தகவலில் பேரில் பெரியநாயக்கன்பாளையம் டி.எஸ்.பி நமச்சிவாயம், துடியலூர் இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்த மணிகண்டனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கொலையில் முடிந்த பெண்களின் குழாயடி சண்டை; ஒருவர் கைது
தொடர்ந்து கணுவாயில் உள்ள தனது அம்மா வீட்டில் பதுங்கி இருந்த பாலசுப்பிரமணியத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடிபோதையில் தனது மனைவியின் தம்பியை கொலை செய்த கணவனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.