4000 போலீசாருக்கு கறி விருந்து... வாழையிலையில் மட்டன் பிரியாணி, ஒரு பிடி பிடித்த டிஜிபி சைலேந்திரபாபு..

By Ezhilarasan BabuFirst Published Aug 11, 2022, 3:40 PM IST
Highlights

செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசாருக்கு  டிஜிபி சைலேந்திரபாபு பிரியாணி விருந்து வழங்கினார். கடந்த 12 நாட்களாக போலீசார் ஒலிம்பியாட் பாதுகாப்பில் ஈடுபட்டு வந்த நிலையில் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசாருக்கு  டிஜிபி சைலேந்திரபாபு பிரியாணி விருந்து வழங்கினார். கடந்த 12 நாட்களாக போலீசார் ஒலிம்பியாட் பாதுகாப்பில் ஈடுபட்டு வந்த நிலையில் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

சர்வதேச அளவில் புகழ்பெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்துள்ள மாமல்லபுரத்தில் கடந்த 12 நாட்களாக நடைபெற்று வந்தது. அந்த போட்டி மிகவும் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது, அதில் 2 ஆயிரத்திற்கும் அதிகமான செஸ் விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர். சர்வதேச அளவில் இருந்து பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களும் அப்போட்டியில் கலந்து கொண்டிருந்தனர், போட்டி மிகவும் அமைதியான முறையில் பாதுகாப்பான முறையில் நடைபெற வேண்டும் என தமிழக போலீஸார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

இதையும் படியுங்கள்: மகிழ்ச்சியாக விழாவில் பங்கேற்கும் நான்... கவலையோடு தான் இந்த நிகழ்ச்சிக்கே வந்துள்ளேன்..! மு.க.ஸ்டாலின்

அதற்காக செஸ் போட்டி அரங்கம் மற்றும் மைதானத்தை சுற்றி ஆயிரத்துக்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர், அந்த போட்டியில் எந்தவிதமான அசம்பாவிதமும் ஏற்படாத வகையில் நல்ல முறையில் நடந்து முடிந்துள்ளது. அதாவது போட்டியில் பங்கேற்று இருந்த வீரர்கள் நட்சத்திர ஓட்டல்களில் தங்கி இருந்தனர், அவர்கள் ஓட்டல்களில் இருந்து போட்டி நடைபெறும் அரங்கத்திற்கும், பின்னர் அரங்கத்திலிருந்து ஹோட்டலுக்கும் சென்ற வண்ணம் இருந்தனர்.

இதையும் படியுங்கள்: rahul: modi: பிரதமர் பதவிக்கான தரத்தைக் குறைக்காதீர்கள்: பிரதமர் மோடியை விளாசிய ராகுல் காந்தி

அப்போது அவர்களில் பாதுகாப்பிற்காக இரவு பகல் பாராமல் போலீசார் பணியில் ஈடுபட்டு வந்தனர். இடையிடையே காவல்துறை டிஜிபி பாதுகாப்பு பணிகளை மேற்பார்வையிட்டு வந்தார், வந்திருந்த போட்டியாளர்கள்  செஸ் போட்டி மிக சிறப்பாக நடந்தது, இதுவரை எந்த நாட்டிலும் நடந்திராத அளவிற்கு உபசரிப்பு,  பாதுகாப்பு என எல்லா அம்சங்களும் இந்த மிக சிறப்பாக இருந்தது என வெகுவாக பாராட்டினர்.

இது நாட்டிற்கும் தமிழகத்துக்கும் கிடைத்த பெருமையாகவே கருதப்படுகிறது. இந்நிலையில் போட்டியின்போது அர்ப்பணிப்புடன் பணியாற்றிய காவலர்களை தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு வெகுவாக பாராட்டினார். சிறந்த முறையில் பாதுகாப்பு பணியை மேற்கொண்டு சர்வதேச அளவில் தமிழ்நாட்டிற்கு பெருமை பெற்றுக்கொடுத்த காவலர்களுக்கு நன்றி கூறினார், காவலர்கள் மிகவும் அர்ப்பணிப்புடன் செயல்பட்டதால் எந்தவித அசம்பாவிதமும் ஏற்படவில்லை என அவர் காவலர்களை வெகுவாக பாராட்டினார்.

இந்நிலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசாருக்கு மட்டன் பிரியாணி விருந்து வழங்கப்பட்டது. அப்போது அவர்களுடன் அமர்ந்து டிஜிபி சைலேந்திரபாபு வாழையிலையில் பிரியாணி ருசித்து சாப்பிட்டார். போலீசாருக்கு அவரே பிரியாணி பரிமாறினார். இது அங்கிருந்த காவலர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் இது தொடர்பான புகைப்படங்களும் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்ற வீரர்களுக்கு மூன்று நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 
 

click me!