மனைவிக்கு விவாகரத்து: 7 வருஷம் பெண் போலீசுடன் உல்லாசம் அனுபவித்து வந்த எஸ்.ஐ

Published : Aug 11, 2022, 02:21 PM IST
மனைவிக்கு விவாகரத்து: 7 வருஷம் பெண் போலீசுடன் உல்லாசம் அனுபவித்து வந்த எஸ்.ஐ

சுருக்கம்

மனைவியை விவாகரத்து செய்து விட்டு தனிமையில் இருந்த சப் இன்ஸ்பெக்டர் தன்னுடன் பணியாற்றும் பெண் போலீசை 7 ஆண்டுகளாக பாலியல் வன்புணர்வு செய்துவந்துள்ள சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.   

மனைவியை விவாகரத்து செய்து விட்டு தனிமையில் இருந்த சப் இன்ஸ்பெக்டர் தன்னுடன் பணியாற்றும் பெண் போலீசை 7 ஆண்டுகளாக பாலியல் வன்புணர்வு செய்துவந்துள்ள சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் இக்கொடூரம் அரங்கேறியுள்ளது.

பெண்கள் பல வகைகளில் பல இடங்களில் பாலியல் கொடுமைக்கு ஆளாகி வருகின்றனர். பள்ளிக்கூடம்,  கல்லூரி, மருத்துவமனை, ரயில் நிலையம், பேருந்து நிலையம், அலுவலகங்கள் என பல இடங்களில் பல வகைகளில் பெண்களுக்கு எதிரான பாலியல் சீண்டல்கள் அரங்கேறி வருகிறது. இதை தடுப்பு எத்தனையோ நடவடிக்கைகள் இருந்தும் குற்றங்கள் குறைந்தபாடில்லை. இந்த வரிசையில் போலீஸ் எஸ்ஐ ஒருவர் தன்னுடன் பணியாற்றும் போலீசை பாலியல் வன்புணர்வு செய்து வந்துள்ள கொடூரம் நடந்துள்ளது. விவரம் பின்வருமாறு:-

மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் மகராஜ்புரா காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றுபவர் தர்மேந்திர சிங், இந்நிலையில் இவர் மீது குவாலியர்  அஜாக் காவல்நிலையத்தில் பணியாற்றும் பெண் போலீஸ் பாலியல் புகார் கொடுத்துள்ளார். 

திருமணம் செய்து கொள்வதாக கூறி தன்னை 7 ஆண்டுகள் சப் இன்ஸ்பெக்டர் பாலியல் பலாத்காரம் செய்து வந்ததாக அவர் கூறியுள்ளார். தற்போது இந்த புகார் குவாலியர் காவல்துறை எஸ்.பி யின் பார்வைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அந்தப்  பெண் கொடுத்துள்ள புகாரின் விவரம் பின்வருமாறு:

கடந்த 2015ஆம் ஆண்டு போபாலில் நடந்த போலீஸ் அணிவகுப்பின் போது சப்-இன்ஸ்பெக்டர் தர்மேந்திர சிங்குக்கும் தனக்கும் இடையே நட்பு ஏற்பட்டது, அவர் தனது மனைவியை விவாகரத்து செய்து விட்டு தனிமையில் இருப்பதாக கூறினார், இதனால் எங்கள் இருவருக்கும்  நட்பு ஆழமானதாக மாறியது. 

திருமணம் செய்து கொள்வதாக கூறி என்னை சப்-இன்ஸ்பெக்டர் பலமுறை பாலியல் பலாத்காரம் செய்து வந்தார், இந்நிலையில் திருமணம் செய்துகொள்ள நான் வற்புறுத்திய நிலையில் அவர்  அதை ஏற்கவில்லை, இதனால் அவர் நாடகமாடுகிறார் என்பதை உணர்ந்து அவரிடமிருந்து விலகிக் கொண்டேன். வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டேன், ஆனால் அதற்குப் பின்னரும் சப் இன்ஸ்பெக்டர் என்னை விடவில்லை, எனக்கும் அவருக்கும் இடையே இருந்த அந்தரங்க உறவு குறித்து அவர் எனது கணவரிடம் கூறியுள்ளார். 

இதனால் எனது  திருமண வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது என அந்தப் பெண் கான்ஸ்டபிள் புகாரில் கூறியுள்ளார். தற்போது இந்த புகார் தாதியா எஸ்.பிக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் குவாலியர் சப்-இன்ஸ்பெக்டர் மீது பாலியல் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விரைவில் உண்மை வெளிச்சத்திற்கு வரும் என்றும், தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்  என்றும் எஸ்பி அமித் சங்கி உறுதியளித்துள்ளார்.
 

PREV
click me!

Recommended Stories

ஆண்ட்டியின் அழகில் மயங்கிய கொரியர் ஊழியர்.. ரவுடியின் மனைவிக்கு விடாமல் காதல் மெசேஜ்.. இறுதியில் நடந்த அதிர்ச்சி
கதறிய மருமகள் நிகிலா.. விடாத 52 வயது மாமனார்.. ரசித்த மகன் பிரதீப்.. அமமுக பிரமுகர்கள் வெறியாட்டம்