ராஜேஷ் கொடுத்த புகாரில் சுமார் 550 சவரன் தங்க நகைகள் திருடப்பட்டதாகக் குறிப்பிட்டிருந்தார். ஆனால், போலீசார் சுவாதியிடம் விசாரித்தபோது சேகரின் குடும்பத்தினர் கத்தியைக் காட்டி மிரட்டி என்னிடமிருந்து சேகர் கொடுத்த தங்க நகைகளைப் பறித்துக்கொண்டனர் என்று கூறியிருக்கிறார்.
திருட்டு வழக்கில் ஃபைனான்ஸியர் ஒருவரும், மாடல் அழகியும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் திருடிய 550 சவரன் தங்க நகைகள் எங்கே என்று அந்தப் பெண்ணிடம் கேட்ட கேள்விக்கு அவர் அளித்த பதிலை கேட்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.
சென்னை பூந்தமல்லி முத்துநகரை சேர்ந்தவர் தமிழ்செல்வி. இவரது சொந்த ஊர் தூத்துக்குடி. பூந்தமல்லி பஸ்நிலையம் அருகே நிதி நிறுவனம் மற்றும் ஸ்வீட் ஸ்டால் நடத்தி வருகிறார். இவரது மகன்கள் சேகர் (41), ராஜேஷ் (37). இருவருக்கும் திருமணமாகிவிட்டது. இவர்களது தாயார் தமிழ்ச்செல்வியுடன் ஒரே வீட்டில் கூட்டுக் குடும்பமாக வசித்து வருகின்றனர்.
இதையும் படிங்க;- 550 சவரன் நகையும் குடிச்சி தீர்த்துட்டேன்.. தொழிலதிபரை மடக்கிய மாடல் அழகி பகீர்..
undefined
இந்நிலையில், ராஜேஷ் என்பவர், கடந்த 8-ம் தேதி பூந்தமல்லி காவல் நிலையத்தில் பரபரப்பான புகார் ஒன்றை அளித்தார். அதில், `என்னுடைய அண்ணன் சேகர் (47) என் மனைவியின் 300 சவரன் தங்க நகைகளையும் என்னுடைய அம்மாவின் 200 சவரன் தங்க நகைகளையும் 100 கிராம் எடையுள்ள ஏழு தங்கக்கட்டிகளையும், லட்சக்கணக்கான பணத்தையும் திருடி, சுவாதி என்ற பெண்ணிடம் கொடுத்திருக்கிறார். அதனால் நகைகளை மீட்டுக் கொடுப்பதோடு, நகைகளைத் திருடிய சேகர் மீதும், சுவாதி மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும எனக் குறிப்பிட்டிருந்தார்.
இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் சேகரையும் சுவாதியையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். ராஜேஷ் கொடுத்த புகாரில் சுமார் 550 சவரன் தங்க நகைகள் திருடப்பட்டதாகக் குறிப்பிட்டிருந்தார். ஆனால், போலீசார் சுவாதியிடம் விசாரித்தபோது சேகரின் குடும்பத்தினர் கத்தியைக் காட்டி மிரட்டி என்னிடமிருந்து சேகர் கொடுத்த தங்க நகைகளைப் பறித்துக்கொண்டனர் என்று கூறியிருக்கிறார்.
இதுதொடர்பாக சுவாதி கூறுகையில்;- மாடல் அழகி, 'எனக்கு ஸ்டார் ஓட்டல்களில் மது அருந்தும் பழக்கம் உள்ளது. சேகர் கொடுத்த நகைகளை எல்லாம் விற்று ஸ்டார் ஓட்டலில் மது அருந்தினேன். சேகர் கொடுத்த 3 கார்களை ஆண் நண்பர்களுக்கு கொடுத்துவிட்டேன். அந்த டுகாட்டி பைக்கையும் இளம்காதலுனுக்கு கிஃப்ட்டாக கொடுத்துவிட்டேன். என்னை நிர்வாணகமாக நிக்க வைத்து நகைகளைப் போட்டு அழகு பார்ப்பார். எனக்கு சினிமா வாய்ப்பு கிடைக்கவேயில்லை. பல முயற்சிகள் எடுத்தும் பயனில்லை. அப்போதுதான் சேகர் வந்து சிக்கினார். என்னுடன் ஜாலியாக பொழுதைக் கழித்த மகிழ்ச்சியில் சேகர் எனக்கு கொடுத்த கட்டணம் மற்றும் பரிசை திருப்பிக் கேட்க யாருக்கும் உரிமையில்லை. சேகர் கொடுத்த பணம், நகை எல்லாம் செலவாகிப்போச்சு என்று போலீசாரை அதிரவைத்துள்ளார்.
இதையும் படிங்க;- காரில் இருந்து வந்த முனகல் சத்தம்! கஞ்சா போதையில் இருந்த இளைஞர்கள் புதருக்குள் தூக்கி சென்று கூட்டு பலாத்காரம்