ஓடும் ஆட்டோவில் அந்த இடத்தில் கை வைத்து சில்மிஷம்.. அடுத்த நொடியே கீழே குதித்த சிறுமி.. கானா பாடகர் கைது.!

Published : Aug 11, 2022, 12:09 PM ISTUpdated : Aug 11, 2022, 12:16 PM IST
 ஓடும் ஆட்டோவில் அந்த இடத்தில் கை வைத்து சில்மிஷம்.. அடுத்த நொடியே கீழே குதித்த சிறுமி.. கானா பாடகர் கைது.!

சுருக்கம்

சென்னை ஓடும் ஆட்டோவில் பயணம் செய்த பள்ளி மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட கானா பாடகர் உட்பட இரண்டு போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். 

சென்னை ஓடும் ஆட்டோவில் பயணம் செய்த பள்ளி மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட கானா பாடகர் உட்பட இரண்டு போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். 

சென்னை புது வண்ணாரப்பேட்டை சேர்ந்த  மாணவி தண்டையார் பேட்டையில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு பயின்று வருகிறார். மாணவி வழக்கம் போல் பள்ளி செல்ல கடந்த 8ம் தேதி ஷேர் ஆட்டோவில் ஏறியுள்ளார். அந்த ஆட்டோவில் ஏற்கனவே 25 வயது மதிக்கத்தக்க இரண்டு நபர்கள் பயணித்துள்ளனர். அப்போது, புதுவண்ணாரப்பேட்டையை ஆட்டோ நெருங்கியபோது மாணவியிடம் அந்த நபர்கள் சில்மிஷத்தில் ஈடுபட்டதோடு செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். மேலும் மாணவியின் மீது கை பட்டதால் அதிர்ச்சியடைந்த மாணவி தன்னை கடத்தி விடுவார்களோ என்ற பயத்தில் ஓடும் ஆட்டோவில் இருந்து கீழே குதித்துள்ளார்.

இதில், மாணவியின் மூக்கு தாடை போன்ற பகுதிகளில் காயம் ஏற்பட்டது. உடனடியாக ஆட்டோவை அங்கேயே நிறுத்திவிட்டு மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பித்தனர். காயமடைந்த மாணவியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டவர்கள் அடையாளம் காணப்பட்டனர்.

இதனையடுத்து, வண்ணாரப்பேட்டையை சேர்ந்த கானா பாடகரான டோலக் ஜெகன் என்ற  ஜெகதீஸ்வரனையும் கொருக்குப்பேட்டையை சேர்ந்த மணி, ஆகிய இருவரையும் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

நான் உனக்கு போதாதா! என் பொண்ணு கேக்குதா.. ஆத்திரத்தில் 46 வயது ஆன்டி.. அலறிய சூர்ய பிரதாப் சிங்
சார்.. நான் உங்க ஸ்டூடண்ட்ஸ்.! இப்படியெல்லாம் பண்ணாதீங்க! எவ்வளவு சொல்லியும் கேட்காத ஆசிரியருக்கு செருப்பு மாலை