நண்பர்களின் பகையை தீர்க்க.. மனைவியை விருந்தாக்கிய காம கொடூர கணவன்..வெளியான பகீர் சம்பவம்!

Published : May 04, 2022, 01:27 PM IST
நண்பர்களின் பகையை தீர்க்க.. மனைவியை விருந்தாக்கிய காம கொடூர கணவன்..வெளியான பகீர் சம்பவம்!

சுருக்கம்

உத்தரபிரதேச மாநிலம் படான் மாவட்டம் ஷஷ்வான் கிராமத்தை சேர்ந்தவருக்கு திருமணமாகி 22 வயதில் மனைவி உள்ளார். அந்த நபருக்கும் அதேகிராமத்தை சேர்ந்த சிலருக்கும் இடையே பகை இருந்துள்ளது. 

இதனால், தனது எதிரிகளை சிக்கவைக்க அந்த நபர் திட்டமிட்டுள்ளார். தனது மனைவியை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டனர் என போலீசில் புகார் அளித்தால் எதிரிகள் சிறைக்கு செல்வார்கள் என எண்ணியுள்ளார். இதற்காக தனது நண்பனை அழைத்த அந்த நபர் தனது திட்டத்தை கூறியுள்ளார். அதாவது, தனது மனைவியை பாலியல் வன்கொடுமை செய்யும்படி தனது நண்பனிடம் அந்த நபர் கூறியுள்ளார்.

இந்த பாலியல் வன்கொடுமையை தனது எதிரிகள் தான் செய்தனர் என போலீசில் கூறி அவர்களை சிறையில் தள்ளிவிடலாம் என திட்டமிட்டுள்ளார். இதனை தொடர்ந்து, திட்டமிட்டபடி நேற்று அந்த நபர் தனது மனைவியை கிராமத்திற்கு அருகே உள்ள காட்டுப்பகுதிக்கு பைக்கில் அழைத்து சென்றுள்ளார். அங்கு வந்த அந்த நபரின் நண்பன் அவரின் மனைவியை இரு முறை வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளான். 

இதையடுத்து, தனது எதிரிகள் தான் தன் மனைவியை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டனர் என அந்த நபர் போலீசில் புகார் அளித்துள்ளார். போலீசார் நடத்திய விசாரணையில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான அந்த பெண் நடந்த சம்பவத்தை தெரிவித்துள்ளார். தன் கணவர் தான் அவரது நண்பனை ஏவி இந்த செயலில் ஈடுபட்டதாகவும், அவரது நண்பர் தான் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் அந்த பெண் போலீசில் தெரிவித்தார். 

இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார் அப்பெண்ணின் கணவனையும், பாலியல் வன்கொடுமை செய்த அவரின் நண்பனையும் கைது செய்தனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய நபர்களின் பெயர் விவரங்களை இதுவரை போலீசார் வெளியிடவில்லை. இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

இதையும் படிங்க : “உயிரே போனாலும் நடத்திக்காட்டுவோம்..!” ஸ்டாலின் அரசுக்கு மதுரை ஆதீனம் சவால்..!

இதையும் படிங்க : CBI Raid in Kerala CM's House : சரிதா நாயர் பாலியல் புகார்.. முதலமைச்சர் வீட்டில் நுழைந்த சிபிஐ.! பரபரப்பு.!

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

பர்கா போட்டு சுத்தினா தப்பிச்சிரலாமா? சிறுமியைச் சீரழித்துவிட்டு பெண் வேடத்தில் சுற்றிய கான்ஸ்டபிள் கைது!
திருநங்கைக்கு 25 இடங்களில் அரிவாள் வெட்டு! சாக்கடையில் வீசிய லாரி டிரைவர்! நடந்தது என்ன? பரபரப்பு தகவல்!