புகார் அளிக்க சென்ற சிறுமி.. காவல் நிலையத்தில் மீண்டும் கற்பழிக்கப்பட்ட கொடூரம்..!

Nandhini Subramanian   | Asianet News
Published : May 04, 2022, 12:40 PM IST
புகார் அளிக்க சென்ற சிறுமி.. காவல் நிலையத்தில் மீண்டும் கற்பழிக்கப்பட்ட கொடூரம்..!

சுருக்கம்

அங்கிருந்த காவல் துறை அதிகாரி திலக்தரி சரோஜ் புகார் அளிக்க வந்த சிறுமியை மீண்டும் கற்பழித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ஏற்கனவே கற்பழிக்கப்பட்ட 13 வயது சிறுமி, கற்பழிப்பு புகார் அளிக்க காவல் நிலையம் சென்றுள்ளார். காவல் நிலையத்தில் இருந்த அதிகாரியும் சிறுமியை மீண்டும் கற்பழித்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

உத்திர பிரதேச மாநிலத்தின் லக்னோ நகரில் 13 வயது சிறுமியை நான்கு பேர் கொண்ட கும்பல் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி இருக்கிறது. இதை அடுத்து பாதிக்கப்பட்ட சிறுமி புகார் அளிக்க தனது உறவினருடன் காவல் நிலையம் சென்றார். அங்கிருந்த காவல் துறை அதிகாரி திலக்தரி சரோஜ் புகார் அளிக்க வந்த சிறுமியை மீண்டும் கற்பழித்த சம்பவம் அரங்கேறியது. 

பணி இடைநீக்கம்:

இதை அடுத்து திலக்தரி சரோஜ் பணி இடைநீக்கம் செய்யப்பட்டு, அவர் மீது குற்ற வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது. எனினும், குற்ற வழக்குப் பதிவு செய்யப்பட்டதை அடுத்து திலக்தரி சரோஜ் தலைமறைவாகி விட்டார். இவரை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இத்துடன் கூட்டு கற்பழிப்பில் ஈடுபட்டவர்களை தேடும் பணிகளும் தீவிரப்படுத்தி இருக்கின்றனர்.

பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை கொடுத்த புகாரின் பேரில் முதல் தகவர் அறிக்கை பதிவு  செய்யப்பட்டுள்ளது. புகாரின் படி நான்கு பேர் கொண்ட கும்பல் சிறுமியை ஏப்ரல் 22 ஆம் தேதி கடத்திக் கொண்டு போபால் அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு வைத்து சிறுமியை நான்கு நாட்களுக்கு தொடர்ச்சியாக பாலியல் சீணடலில் ஈடுபட்டுள்ளனர். பின் அவர்கள் சிறுமியை அவர் வசித்து வரும் கிராமத்திற்கு அழைத்து வந்து, அங்கிருந்து வேக வேகமாக தப்பி சென்றனர் என குறிப்பிடப்பட்டு உள்ளது.

மீண்டும் துயரம்:

இதை அடுத்து காவல் நிலைய அதிகாரி பாதிக்கப்பட்ட பெண்ணிடம் புகாரை வாங்கிக் கொண்டு அவரை அனுப்பிவிட்டு, மறுநாள் மீண்டும் காவல் நிலையத்திற்கு வர வலியுறுத்தி இருக்கிறார். அடுத்த நாள் சிறுமி தனது வாக்குமூலத்தை கொடுக்க உறவினருடன் காவல் நிலையம் வந்துள்ளார். வாக்குமூலம் பெறுவதாக கூறி அங்கிருந்த காவல் துறை அதிகாரி சிறுமியை மீண்டும் கற்பழித்தார் என குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இந்த வழக்கில் சிறுமியுடன் வந்த உறவினர் மீதும் குற்றம்சாட்டப்பட்டு உள்ளது. 

சிறுமியை மீண்டும் கற்பழித்த காவல் துறை அதிகாரி மீது போக்சோ பிரிவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என லலித்பூர் காவல் நிலையம் சார்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் அந்த அதிகாரி பணி நீக்கம் செய்யப்பட்டு குற்ற வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது. 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

பெற்ற குழந்தையை கொன்ற கொடூர தாய்.. கோர்ட் வழங்கிய பரபரப்பு தீர்ப்பு.. கள்ளக்காதலன் எஸ்கேப்..
லெஸ்பியன் உறவு! மால்தி தேவியுடன் மனைவி உல்லாசம்! நேரில் பார்த்த கணவர்! இறுதியில் நடந்த அதிர்ச்சி!