நாய் மலம் கழித்ததால் எழுந்த சண்டை.. பிறப்புறுப்பில் ஓங்கி மிதித்து கொடூர தாக்குதல்.. மனைவி கண்ணீர் புகார்..

By Thanalakshmi VFirst Published May 4, 2022, 11:11 AM IST
Highlights

வீட்டின் முன் நாய் மலம் கழித்தது தொடர்பாக எழுந்த தகராறில் பிறப்புறுப்பில் ஓங்கி மிதித்து கொடூரமாக தாக்கியதாக கூறப்படும் சம்பவம் குறித்து போலீசார் வழக்குபதிவு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 

வீட்டின் முன் நாய் மலம் கழித்தது தொடர்பாக எழுந்த தகராறில் பிறப்புறுப்பில் ஓங்கி மிதித்து கொடூரமாக தாக்கியதாக கூறப்படும் சம்பவம் குறித்து போலீசார் வழக்குபதிவு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.நீலகிரி மாவட்டம், கீழ் கோத்தகிரியை சேர்ந்த சௌந்தர ராஜன். கட்டுமான வேலைகளை செய்து வரும் இவர், கடந்த ஏப்ரல் 1 ஆம் தேதி வழக்கம்போல பணியை முடித்துவிட்டு வீடு திரும்பியிருக்கிறார். அப்போது, அவரது வீட்டு வாசலில், மேல் வீட்டில்  குடிப்பிருப்போர் வளர்க்கும் நாய் மலம் கழித்ததாக சொல்லப்படுகிறது.

அதனைக்கண்ட செளந்தர ராஜன் ஆத்திரத்தில், அக்கம் பக்கத்தில் குடியிருப்போரை ஆபாச வார்த்தைகளில் திட்டியதாக கூறப்படுகிறது. தொடர்ந்து, அண்டை வீட்டில் இருக்கும் போலீஸ் சகோதரர்கள் இருவர் ஆபாச வார்த்தைகளில் பேசிய சௌந்தர ராஜனைக் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த அவர், சம்பவ இடத்திலே மயங்கி விழுந்ததாக சொல்லப்படுகிறது. 

அதையடுத்து உடனடியாக அவரை மீட்டு கோத்தகிரி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், மேல் சிகிச்சையாக கோவை அரசு மருத்துவமனைக்கும் கொண்டு செல்ல பரிந்துரைந்துள்ளார். இச்சூழலில் தனது கணவனை கடுமையாக தாக்கியவர்கள் மீது புகார் அளித்தும் சோலூர்மட்டம் காவல்துறையினர் இதுவரை எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், பாதிக்கப்பட்ட கணவருக்கு தொடர் சிகிச்சை அளிக்க மருத்துவ செலவுக்கான தொகையைப் பெற்றுத்தர வேண்டும் எனவும் அவரது மனைவி சரண்யா காவல்துறை உயர் அதிகாரியிடம் புகார் மனு அளித்துள்ளார்.

இதுக்குறித்து பேட்டியளித்த அவரது மனைவி சரண்யா,” வழக்கம் போல் வேலை முடித்து விட்டு வீடு திரும்பிய போது, வீட்டு வாசலில் நாய் மலன் கழிந்திருந்தது. இதனை பார்த்த என் கணவர், கோபத்தில் சத்தல் போட்டார். இதனால், மேல் வீட்டில் வசிக்கும் போலீஸ் சகோதர்களான சரவணன், பிரகாஷ், அவரது தந்தை கிருஷ்ணன் ஆகியோர் கீழ் இறங்கி வந்து அவரை கடுமையாக தாக்கினர். மேலும் அவரது பிறப்புறுப்பில் ஓங்கி காலால் மிதித்து கொடூரமாக தாக்கினர். அவர்கள் மீது புகார் கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறினார்.

மருத்துவ செலவுக்கு மட்டும் இதுவரை சுமார் ரூ 1 லட்சம் வரை செலவாகியுள்ளது. இன்னும் முழுவதுமாக குணமடைய ரூ.4 லட்சம் வரை செலவாகும் என்று தனியார் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட நபர்களிடம் பணம் கேட்டால், அதெல்லாம் தர முடியாது; நீங்கள் முடிந்ததை பார்த்துக்கொள்ளுங்கள்’ என்று சொல்கின்றனர். என் கணவரின் அறுவை சிகிச்சைக்கு உதவிட வேண்டும்" என்று கண்ணீருடன் கோரிக்கை வைத்தார்.இந்த விவகாரம் தொடர்பாக இரண்டு தரப்பினர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாகவும் காவல் ஆய்வாளர் வேல்முருகன் தெரிவித்தார். 

click me!