ச்சீ..! பொன்ன பெத்த அப்பன் பண்ற காரியமா இது ? மகளுக்கு பாலியல் டார்ச்சர் செய்த தந்தை..அதிர்ச்சி சம்பவம் !!

Published : Apr 27, 2022, 02:15 PM IST
ச்சீ..! பொன்ன பெத்த அப்பன் பண்ற காரியமா  இது ? மகளுக்கு பாலியல் டார்ச்சர் செய்த தந்தை..அதிர்ச்சி சம்பவம் !!

சுருக்கம்

செய்தி தாளை திறந்தாலே கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை.. அட என்னப்பா இது என சினிமாக்களில் வசனம் இடம்பெற்றுள்ளதை கேட்டிருப்போம்.அதுபோல உலகம் முழுவதும் பெண்களுக்கு எதிராக பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. 

இதில் முக்கியமான விஷயமாக பார்க்க வேண்டுவது, வெளியே பயிரை மேயும் கதைதான். பாலியல் குற்றங்கள் பெரும்பாலும் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் அல்லது நெருங்கிய வட்டத்திற்குள் இருப்பவர்களால் பாலியல் குற்றங்கள் ஏற்படுவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றது.  ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி பகுதியில் 8-ம் வகுப்பு படித்து வந்த 13 வயது சிறுமியை அவரது தந்தை கடந்த 2021-ம் வருடம் முதல் பாலியல் ரீதியாக தொந்தரவு செய்துள்ளார். 

மேலும் இதுதொடர்பாக, வெளியில் கூறினால் கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டியும் உள்ளார். இந்நிலையில், கடந்த 18.04.2021ம் தேதி சிறுமியை அவரது தந்தை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்தபோது, அவரது மனைவி பார்த்துள்ளார். இதுதொடர்பாக அன்றைய தினமே பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் கீழக்கரை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்து, கைது செய்யப்பட்டு அடைக்கப்பட்டார்.

இவ்வழக்கு தொடர்பாக, நேற்று இராமநாதபுரம் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் இருதரப்பு வாதங்களும் முடிந்த நிலையில் குற்றவாளி என தந்தையை நீதிபதி சுபத்ரா அறிவித்து, பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தைக்கு சாகும் வரை சிறை தண்டனையும், ரூ.1,00,000 அபராதம் மற்றும் அபராதத்தை கட்ட தவறினால் கூடுதலாக 5 வருடங்கள் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார்.

இதையும் படிங்க : கண்காணிப்பில் திமுக முக்கிய தலைகள்.. உளவுத்துறை ‘ஷாக்’ ரிப்போர்ட்.! கண்சிவந்த ஸ்டாலின் !!

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

முதலிரவில் அதிர்ச்சி.. திருமணமான 3 நாளில் விவாகரத்து கேட்ட புதுப்பெண்! நடந்தது என்ன?
ஆண்ட்டியின் அழகில் மயங்கிய கொரியர் ஊழியர்.. ரவுடியின் மனைவிக்கு விடாமல் காதல் மெசேஜ்.. இறுதியில் நடந்த அதிர்ச்சி