
கல்லூரி மாணவிகள் நடுரோட்டில் கட்டிப்புரண்டு சண்டையிட்ட சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதைப் பார்த்த பொதுமக்கள் அவர்களை விளக்கியதுடன், அங்கு வந்த போலீசார் அவர்களுக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்துள்ளனர்.
மாணவர்கள் பொது இடங்களில் வரம்பு மீறும் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிலும் சமீபகாலமாக அரசு பள்ளி மாணவர்கள் பள்ளியில் அட்ராசிட்டி அதிகரித்துள்ளது. இது தொடர்பான வீடியோக்கள் வெளியான வண்ணம் இருந்து வருகிறது. வகுப்பறையில் மாணவிகள் மடியில் படுத்து மாணவர்கள் ஓய்வெடுப்பது, மாணவிகள் பேருந்தில் பீர் குடிப்பது, நடுரோட்டில் குத்தாட்டம் போட்ட கும்மாளம் அடிப்பது போன்ற அசுயையான சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் வேலூர் அரசுப் பள்ளி ஒன்றில், மாணவர்கள் இருக்கையை உடைத்த சம்பவம் வீடியோவாக வைரலானது. இந்நிலையில் திருவாரூர் மாவட்டம் சூரனூர் அரசுப் பள்ளியில் மாணவர்கள் வகுப்பறைக்குள் நடனமாடி அதை செல்போனில் படம் பிடித்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளனர்.
இந்த வீடியோ வைரலாகி வருகிறது. என்னுடைய மாணவர்கள் பள்ளிக்கூடத்திற்கு செல்போன் எடுத்து வர கூடாது எனவும் சில பள்ளிகளில் தடை விதிக்கப்பட்டுள்ளது. அரசுப்பள்ளி குறித்து தவறான பிம்பத்தை ஏற்படுத்தும் வகையில் இது போன்ற வீடியோக்களை வெளியிடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் வேண்டுமென அரசு பள்ளி ஆசிரியர் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கும் வகையில் தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபுவும் வீடியோ வெளியிட்டுள்ளார். தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மாணவர்கள் ஒழுக்கம் காக்க வேண்டும் என்றும் ஆசிரியர்களுக்கு உரிய மரியாதை கொடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். இது ஒருபுறம் நடந்து வரும் நிலையில், மறுபுறம் கல்லூரி மாணவர்களின் அட்ராசிட்டி அரங்கேறி வருகிறது.
சென்னை புது வண்ணாரப்பேட்டையில் அமைந்துள்ள அரசு கலை அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் பயின்று வரும் மாணவிகள் சிலர் நடுரோட்டில் ஒருவர் மாற்றி ஒருவர் கட்டிப்புரண்டு சண்டையிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது மாணவிகள் கல்லூரி முடித்து பேருந்துக்காக காத்திருந்தனர். அப்போது இரு மாணவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. அது முற்றி இருவருக்குமிடையே கைகலப்பாக மாறியது, அதில் ஒருவர் குடுமியை ஒருவர் பிடித்து சண்டையிட்டு சாலையில் கட்டிப்புரண்டனர்.
இதையடுத்து அங்கிருந்த பொதுமக்கள் மாணவிகள் இருவரையும் விலக்கி விட்டனர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மாணவிகளை எச்சரித்து அனுப்பி வைத்தனர். இது புது வண்ணாரப்பேட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மாணவர்கள் நாளுக்கு நாள் வரம்பு மீறி பொது இடத்தில் நடந்து கொள்ளும் சம்பவங்கள் எதிர்கால தலைமுறை குறித்த கேள்வி எழுப்பியுள்ளது.