தலைக்கேறிய போதை.. உல்லாசத்தின் போது மூதாட்டி கொலை.. கள்ளக்காதலன் அதிரடி கைது..!

Published : Apr 27, 2022, 11:37 AM IST
தலைக்கேறிய போதை.. உல்லாசத்தின் போது மூதாட்டி கொலை.. கள்ளக்காதலன் அதிரடி கைது..!

சுருக்கம்

சேலம் மாவட்டம் கருப்பூர் வெள்ளக்கல்பட்டி புதூரை சேர்ந்தவர் சுந்தரம். இவரது மனைவி மைலி (60). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். சுந்தரம், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வேறொரு திருமணம் செய்து கொண்டு தனியாக சென்று விட்டார். மது பழக்கம் கொண்ட மைலி, கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. அங்குள்ள ஊத்தோடை பகுதியில் மாவு அரைக்கும் மில் அருகே கரட்டு பகுதி யில் மைலி மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார்.

சேலம் அருகே மூதாட்டியுடன் உல்லாசமாக இருந்துவிட்டு கட்டையால் அடித்து கொலை செய்த கள்ளக்காதலனை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். 

சேலம் மாவட்டம் கருப்பூர் வெள்ளக்கல்பட்டி புதூரை சேர்ந்தவர் சுந்தரம். இவரது மனைவி மைலி (60). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். சுந்தரம், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வேறொரு திருமணம் செய்து கொண்டு தனியாக சென்று விட்டார். மது பழக்கம் கொண்ட மைலி, கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. அங்குள்ள ஊத்தோடை பகுதியில் மாவு அரைக்கும் மில் அருகே கரட்டு பகுதி யில் மைலி மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார்.

இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார்  மைலி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனையில் மைலியின் நெஞ்சுப்பகுதியில் காயம் இருந்தது. அவரை அடித்து கொன்றது யார்? என போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். 

இதில், அதே பகுதியை சேர்ந்த கோவிந்ததராஜ்(52) என்பவருடன் மைலியை பார்த்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். அவரை பிடித்து விசாரித்தபோது மைலியை கட்டையால் நெஞ்சு பகுதியில் அடித்ததாக அவர் தெரிவித்தார். கோவிந்ராஜூக்கு 2 மனைவிகள் முதல் மனைவிக்கு 2 மகன்களும், 2வது மனைவிக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். 2 மனைவிகளும் அவரை விட்டு பிரிந்து சென்றுவிட்டனர். தனியாக கூலி வேலைக்கு செல்லும் கோவிந்தராஜூக்கும் மைலிக்கும் 3 ஆண்டுகளாக பழக்கம் ஏற்பட்டது. மதுகுடிக்கும் பழக்கம் கொண்ட இவர்கள் ஒன்றாக இருந்து மதுகுடிப்பதையும் பிறகு உல்லாசமாக இருப்பதையும் வாடிக்கையாக கொண்டிருந்தனர். 

அதன்படி கடந்த 22ம் தேதி இரவு கோவிந்தராஜ் வீட்டிற்கு மைலி வந்துள்ளார். இருவரும் உல்லாசமாக இருந்துவிட்டு மது குடித்துள்ளனர். போதையில் கோவிந்தராஜை மைலி திட்டியுள்ளார். ஆத்திரமடைந்த கோவிந்தராஜ் அங்கு கிடந்த கட்டையால் மல்லாந்த நிலையில் படுத்து கிடந்த மைலியின் நெஞ்சில் அடித்துள்ளார். அடிதாங்க முடியாத அவர் ஓட்டம் பிடித்தார். இதில், நிலைதடுமாறி கரட்டுப்பகுதியில் கீழே விழுந்துள்ளார். போதையில் கிடந்த அவர் அப்படியே இறந்துள்ளார். அதே நேரத்தில் கோவிந்தராஜூம் போதையில் வீட்டில் படுத்ததால் அவருக்கும் மைலி இறந்தது மறுநாள்தான் தெரியவந்தது. இவை அனைத்தும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த வழக்கை தற்போது கொலை வழக்காக மாற்றி கோவிந்தராஜை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையிலடைத்தனர். 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

சினிமா மிஞ்சும் திகில்.. காட்டிக்கொடுத்த காலி மதுபாட்டில்கள் பார் கோடுகள்.. பெண் கொலை வழக்கில் ஓய்வு பெற்ற காவலர் கைது
அரைகுறை ஆடையுடன் அமர்ந்திருந்த ஸ்ரேயா! கதறியும் விடாத தந்தை, மகன்! இறுதியில் நடந்த அதிர்ச்சி!