கள்ளக் காதலியுடன் சேர்ந்து மனைவி கொலை... 40 கி.மீ. பைக்கில் தூக்கி வந்து சடலத்தை வீசி சென்ற கொடூரம்..!

Nandhini Subramanian   | Asianet News
Published : Apr 27, 2022, 10:55 AM IST
கள்ளக் காதலியுடன் சேர்ந்து மனைவி கொலை... 40 கி.மீ. பைக்கில் தூக்கி வந்து சடலத்தை வீசி சென்ற கொடூரம்..!

சுருக்கம்

கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த பிரியா விபசார புரோக்கர்களுடன் சேர்ந்து விபசாரத்தில் ஈடுபட்டு வந்ததாது கூறப்படுகிறது.  

கள்ளக் காதலியுடன் சேர்ந்து கொண்டு மனைவியை தீர்த்துக் கட்டியதோடு, சடலத்தை 40 கி.மீ. வரை இருசக்கர வாகனத்தில் தூக்கி வந்து புதரில் வீசி சென்ற நபரை போலீசார் கைது செய்துள்ளனர். மனைவியை கள்ளக் காதலியுடன் சேர்ந்து கொண்டு கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

காஞ்சிபுரம் அடுத்த காவேரிபாக்கம் பகுதியை சேர்ந்த பிரியா கடந்த 23-ந்தேதி ஸ்ரீபெரும்புதூரை அடுத்த தெரேசாபுரத்தின் அருகில் உள்ள முட்புதரில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த ஸ்ரீபெரும்புதூர் போலீசார் உடலை கைப்பற்றி விசாரணையை தொடங்கினர். கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த பிரியா விபசார புரோக்கர்களுடன் சேர்ந்து விபசாரத்தில் ஈடுபட்டு வந்ததாது கூறப்படுகிறது.

இதை அடுத்து சந்தேகத்தின் பேரில் பிரியாவின் கணவரான நவீன்குமாரை போலீசார் விசாரித்தனர். அப்போது அவர் கள்ளக்காதலியான கல்பனாவுடன் சேர்ந்து மனைவி பிரியாவை கொலை செய்து உடலை ஸ்ரீபெரும்புதூர் அருகே வீசி சென்றதாக குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

நவீன்குமார் கொடுத்த ஒப்புதல் வாக்குமூலத்தின் பேரில் நவீன்குமார் மற்றும் அவரது கள்ளக்காதலி கல்பனா ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இதைத் தொடர்ந்து நவீன் குமாரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. 

வாக்குமூலம்:

அதன்படி தனக்கும் பிரியாவுக்கும் திருமணம் ஆகி பிறந்த குழந்தை இறந்து விட்டதாகவும், இதன் காரணமாக பிரியா தன்னை பிரிந்து தடம் மாறி விபசார புரோக்கர்களுடன் சேர்ந்து விபசாரத்தில் ஈடுபட்டார் என தெரிவித்தார். இதோடு மனைவி பிரிந்ததை அடுத்து தனக்கும், ஏற்கனவே திருமணமாகி கணவரை பிரிந்த கல்பனாவுக்கு பழக்கம் ஏற்பட்டதாக நவீன்குமார் தெரிவித்தார்.

இருந்த போதும் பிரியா விபச்சார தொழிலில் ஈடுபடுவது தனக்கு பிடிக்கவில்லை என்பதால், அவரை பலமுறை கண்டித்துள்ளார். எனினும், அவள் அதை கண்டு கொள்ளாமல் தொடர்ந்து விபசாரத்தில் ஈடுபட்டு வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கஞ்சா விற்றதாக கல்பனா மற்றும் சகோதரனை போலீசில் பிரியா பிடித்துக் கொடுத்து இருக்கிறார்

கொலை செய்ய முடிவு:

இதனால் கோபத்தில் பிரியவை தீர்த்துகட்ட முடிவு செய்ததாக நவீன் குமார் தெரிவித்தார். இதற்கு கல்பனாவும் ஒப்புதல் அளித்து இருக்கிறார். "இதை அடுத்து பிரியாவிடம் பேச வேண்டும் என்று அழைத்தேன். அவளும் வர சம்மதித்தாள். இதனால் அவளை சின்ன காஞ்சிபுரம் டீச்சர்ஸ் காலனி பகுதியில் உள்ள வாடகை வீட்டிற்கு அழைத்து சென்று, அங்கு பிரியாவுக்கு மது கொடுத்தோம்.

"மது குடித்து போதையில் இருந்த பிரியாவை நானும், கல்பனாவும் சேர்ந்து பிரியாவின் வாயில் துணியை திணித்து, கழுத்தை இறுக்கி கொலை செய்தோம். அவள் இறந்து விட்டதை உறுதி செய்த பின் போலீசில் சிக்காமல் இருக்க உடலை அங்கிருந்து வேறு இடத்துக்கு கொண்டு சென்று வீச திட்டமிட்டோம்." என அவர் தெரிவித்தார்.

அதன்படி நள்ளிரவு வேளையில் யாருக்கும் தெரியாமல் பிரியாவின் உடலை மோட்டார் சைக்கிளில் தூக்கிக் கொண்டு 40 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த தெரேசாபுரத்தின் அருகே இருந்த முட்புதரில் வீசி, அங்கிருந்து உடனடியாக தப்பி சென்று விட்டோம். என நவீன் குமார் போலீசாரிடம் கொடுத்த வாக்குமூலத்தில் கூறி உள்ளார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

அரைகுறை ஆடையுடன் அமர்ந்திருந்த ஸ்ரேயா! கதறியும் விடாத தந்தை, மகன்! இறுதியில் நடந்த அதிர்ச்சி!
திருமணமான பெண்ணுடன் பழகுவதை நிறுத்திடு! கண்டித்த வேல்குமார்! நடுரோட்டில் கதறவிட்ட அதிர்ச்சி!