மனைவியை கொன்றுவிட்டு தற்கொலை நாடகமாடிய கட்டிட தொழிலாளி கைது; போலீஸ் அதிரடி

By Velmurugan s  |  First Published Dec 20, 2023, 10:58 PM IST

திருத்தணி அருகே மனைவியை கொலைசெய்துவிட்டு தற்கொலை செய்துகொண்டதாக நாடகமாடிய கணவனை கைது செய்த காவல் துறையினர் கொலை குறித்து விசாரித்து வருகின்றனர்.


திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகில் உள்ள சிங்கராஜபுரம் காலனியைச் சேர்ந்தவர் ராஜா. இவரது மகள் புவனேஸ்வரி இவரை 4 வருடங்களுக்கு முன்பு திருத்தணி அருகில் உள்ள கிருஷ்ண சமுத்திரம் காலனியில் வசிக்கும் கட்டிட தொழிலாளி சுரேஷ்க்கு திருமணம் செய்து கொடுத்துள்ளார். இவர்களுக்கு 2 வயதில் 1 ஆண் குழந்தை உள்ளது,

சுரேஷ்க்கும், இவரது மனைவி புவனேஸ்வரிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவ்வபோது சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. இதில் திடீரென்று மனைவி புவனேஸ்வரி வீட்டில் இருக்கும் பொழுது இன்று கல்லால் தலையை தாக்கி காயப்படுத்தி உள்ளார். அதில் ஆத்திரம் அடங்காமல் அவரை கழுத்து நெறித்து கொலை செய்துவிட்டு மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கட்டட தொழிலாளி சுரேஷ் நாடகம் ஆடி உள்ளார்.

Tap to resize

Latest Videos

undefined

பாதாள சாக்கடையில் தவறி விழுந்த சிறுவன்; பொதுமக்களுடன் சேர்ந்து திமுக எம்எல்ஏவை ரவுண்டு கட்டிய அதிமுக எம்எல்ஏ

தனது மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக புவனேஸ்வரியின் தந்தை ராஜா திருத்தணி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் கட்டிட தொழிலாளி சுரேஷ் திருத்தணி போலீசார் அழைத்து விசாரித்ததில் மனைவியை கொன்று விட்டு நாடகம் ஆடியது அம்பலமாகியுள்ளது. இதனை அடுத்து சுரேஷ் மீது கொலை வழக்கு பதிவு செய்து திருத்தணி போலீசார் கைது செய்துள்ளனர். மனைவியை கணவனே கொலை செய்துவிட்டு தற்கொலை நாடகமாடிய நபரால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

click me!