எங்கிட்டயே சண்டை போடுறியா.. மதுபோதையில் நண்பனின் தாயை கதற கதற பலாத்காரம் செய்த இளைஞர்..!

Published : Dec 20, 2023, 10:35 AM ISTUpdated : Dec 20, 2023, 10:53 AM IST
 எங்கிட்டயே  சண்டை போடுறியா.. மதுபோதையில் நண்பனின் தாயை கதற கதற பலாத்காரம் செய்த இளைஞர்..!

சுருக்கம்

மயிலாடுதுறை மாவட்டம் மல்லியம் கிராமம் ராயர் அக்ரஹாரத்தை சேர்ந்தவர் சேகர் என்பவரின் மகன் கணேஷ்(30). இவர் கடந்த 16ம் தேதி அதே பகுதியை சேர்ந்த முகம்மது பைசல் (24) என்பவரும் ஒன்றாக மது அருந்திவிட்டு மயிலாடுதுறை சித்தர்காட்டில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இரவு உணவு சாப்பிட்டுள்ளனர்.

நண்பரின் மீது உள்ள ஆத்திரத்தில் அவரது தாயாரை இளைஞர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மயிலாடுதுறை மாவட்டம் மல்லியம் கிராமம் ராயர் அக்ரஹாரத்தை சேர்ந்தவர் சேகர் என்பவரின் மகன் கணேஷ்(30). இவர் கடந்த 16ம் தேதி அதே பகுதியை சேர்ந்த முகம்மது பைசல் (24) என்பவரும் ஒன்றாக மது அருந்திவிட்டு மயிலாடுதுறை சித்தர்காட்டில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இரவு உணவு சாப்பிட்டுள்ளனர். அப்போது தலைக்கேறிய மது போதையில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறு காரணமாக கணேசனை அங்கேயே விட்டுவிட்டு முகம்மது பைசல் மட்டும் வீட்டுக்கு வந்துள்ளார். 

அப்போது இரவு நீண்ட நேரம் ஆகியும் தனது மகன் வீட்டுக்கு வராததால் கணேசனின் தாயார் சரோஜினி (65) முகம்மது பைசலிடம் தனது மகன் குறித்து கேட்டுள்ளார். அதற்கு முகம்மது பைசல் உங்கள் மகன் குடித்துவிட்டு மல்லியம் சுடுகாட்டில் விழுந்து கிடப்பதாக கூறியுள்ளார். 

இதனை உண்மை என்று நம்பி  சரோஜினி முகம்மது பைசலின் வண்டியில் அமர்ந்து சுடுகாட்டுக்கு சென்றுள்ளார். அங்கு கணேசன் மீதான ஆத்திரத்தில் முகம்மது பைசல் சரோஜினியை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு அங்கிருந்து தப்பித்துள்ளார். இதுதொடர்பாக சரோஜினி குடும்பத்தினரிடம் நடந்த சம்பவத்தை கூறி கதறி அழுதுள்ளார்.

இதுகுறித்து சரோஜா கொடுத்த புகாரின் பேரில் மயிலாடுதுறை அனைத்து மகளிர் போலீசார் முகம்மது பைசல் மீது புகார் அளித்தார். இந்த புகாரை அடுத்து பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட பல்வேறு பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து முகம்மது பைசலை கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட  முகம்மது பைசல் மயிலாடுதுறை கிளை சிறையில் அடைக்கப்பட்டார். நண்பரின் மீது உள்ள ஆத்திரத்தில் அவரது தாயாரை இளைஞர், பாலியல் பலாத்காரம் செய்த கொடூரமான சம்பவம் மயிலாடுதுறை பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

PREV
click me!

Recommended Stories

இரவு பகல் பாராமல் எந்நேரமும் ஓயாமல் டார்ச்சர்! அதிமுக பிரமுகரின் மகளை இதற்காக தான் கொன்றேன்!
இரண்டு குழந்தைகளின் தாய் செய்ற வேலையா இது.. பழைய காதலனுக்காக புருஷனை போட்டு தள்ளிய மனைவி