சென்னை சென்ட்ரல் வால்டாக்ஸ் சாலை பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர் ரவுடி பிரேம்குமார் (35). இவர் கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. ரவுடி சேட்டு கொலை வழக்கில் தொடர்புடைய இவர் சமீபத்தில் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்தார்.
சென்னை சென்ட்ரல் அருகே பட்டப்பகலில் டாஸ்மாக் வாசலில் பிரபல ரவுடி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை சென்ட்ரல் வால்டாக்ஸ் சாலை பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர் ரவுடி பிரேம்குமார் (35). இவர் கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. ரவுடி சேட்டு கொலை வழக்கில் தொடர்புடைய இவர் சமீபத்தில் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்தார். இவ்வழக்கில் முக்கிய குற்றவாளியான ரவுடி பிரேம்குமார் தனது கூட்டாளி வசந்தகுமார் (25), குரு (30) ஆகியோருடன் விசாரணைக்காக நேற்று அள்ளிக்குளம் நீதிமன்றத்தில் ஆஜரானார். பின்னர் விசாரணை முடிந்து ரவுடி பிரேம்குமார் மற்றும் அவரது கூட்டாளிகளுடன் சென்ட்ரல் பூந்தமல்லி நெடுஞ்சாலை எவரெஸ்ட் பேருந்து நிலையம் எதிரே உள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்திக் கொண்டிருந்தனர்.
இதையும் படிங்க;- கள்ளக்காதலன் துடிதுடிக்க வெட்டி படுகொலை! காரில் இருந்து படியே ரசித்த கள்ளக்காதலி பிரியா! வெளியான பகீர் தகவல்!
அப்போது அங்கு பயங்கர ஆயுதங்களுடன் வந்த 7 பேர் கொண்ட கும்பல் பிரேம்குமாரை சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டி படுகொலை செய்தது. இதனை தடுக்க முயன்ற நண்பர்களுக்கும் வெட்டு விழுந்தது. பின்னர், அந்த கும்பல் அங்கிருந்து தப்பித்து சென்றது. உடனே இந்த சம்பவம் தொடர்பாக பெரியமேடு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் படுகாயமடைந்த இருவரையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலை செய்யப்பட்ட பிரேம்குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க;- "உங்க மகன ஒரு மணி நேரத்துல போடுறேன்".. பிரியா போட்ட பிளான்.. கச்சிதமா கதையை முடித்த கூலிப்படை.. நடந்தது என்ன?
இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடிவருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் பிரேம் குமார் முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.