மனைவி, 2 மகள்களை துப்பாக்கியால் சுட்டு கொன்றுவிட்டு தலைமை காவலர் தற்கொலை; ஆந்திராவில் பரபரப்பு

Published : Oct 05, 2023, 04:19 PM IST
மனைவி, 2 மகள்களை துப்பாக்கியால் சுட்டு கொன்றுவிட்டு தலைமை காவலர் தற்கொலை; ஆந்திராவில் பரபரப்பு

சுருக்கம்

ஆந்திரா மாநிலத்தில் தலைமைக் காவலர் தனது மனைவி மற்றும் இரு மகள்களை சுட்டு கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆந்திர மாநிலம் கடப்பா நகரில் உள்ள இரண்டாவது நகர காவல் நிலையத்தில் தலைமை காவலராக  பணியில் வந்தவர் வெங்கடேஸ்வரலு. நேற்று இரவு பணி முடித்து வீடு திரும்பிய அவர் இன்று அதிகாலை தனது மனைவி மாதவி மற்றும் இரண்டு பெண் குழந்தைகளை தான் வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார். பிறகு தானும் அதே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். 

துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டு அருகில் வசிப்பவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த காவல் துறையினர் நான்கு பேரும் குண்டுகள் துளைத்து இறந்து கிடப்பதை பார்த்து உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடப்பா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

நாமக்கல்லில் கேஸ் கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் இருவர் உயிரிழப்பு, ஒருவர் படுகாயம்

காவல் துறையினர் நடத்திய முதல்கட்ட விசாரணையில், அவர் பணியில் இருந்த காவல் நிலையத்தில் துப்பாக்கிகள் தலைமை காவலரான வெங்கடேஸ்வரலு பொறுப்பில் இருந்த நிலையில்  உயர் அதிகாரியின் கை துப்பாக்கியை திட்டம் போட்டு நேற்று இரவு எடுத்து வந்து மனைவி, மகள் ஆகியோரை சுட்டு கொலை செய்து தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

சமாதி கட்ட பணம் இருக்கு, ஆசிரியர்களுக்கு சம்பளம் கொடுக்க பணம் இல்லையா? சீமான் ஆவேசம்

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

மேலும் அங்கிருந்த துப்பாக்கி மற்றும் தற்கொலைக்கான காரணம் பற்றி அவர் எழுதி வைத்திருந்த கடிதம் ஆகிவற்றையும் கைப்பற்றிய போலீசார் விசாரணை நடத்துகின்றனர். தலைமை காவலர் வெங்கடேஸ்வரலு தற்கொலை செய்து கொள்ளும் முன் எழுதி வைத்த கடிதத்தில் என்ன எழுதி இருக்கிறார் என்பதை பின்னர் வெளியிடுவோம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

தனியாக இருந்த மாணவியை மிரட்டி ஆபாச வீடியோ பதிவு.. மக்கள் போராட்டத்தால் ம.பி.யில் பதற்றம்!
என் பொண்ண வாரி கொடுத்துட்டு இருக்கேன்! உனக்கு உல்லா*சம் கேக்குதா! டார்ச்சர் கொடுத்த திமுக வழக்கறிஞர் கொ*லை!