தன்னுடன் பேசுவதை நிறுத்தியதால் ஆத்திரமடைந்த இளைஞர் ஒருவர், கல்லூரி மாணவியை கொடூரமாக கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திண்டுக்கல்லை சேர்ந்த 17 வயதான இளம்பெண் ஒருவர், திருச்சி தென்னூரில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி தனியார் கல்லூரியில் படித்து வந்துள்ளார். இந்த நிலையில் தனது தூரத்து சொந்தக்கார இளைஞர் ஒருவருடன் அந்த மாணவிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில் மாணவியின் பெற்றோருக்கு இளைஞருடனான இந்த உறவு தெரிய வந்ததும், அந்த பையனுடன் பேச வேண்டாம் என்று அவர்கள் கூறியுள்ளனர். மேலும் அந்த இளைஞர் சகோதர உறவு முறை என்பதால் திருமணம் செய்து கொள்ள முடியாது என்றும் தெரிவித்துள்ளனர்.
ஆனால், அந்த மாணவி தொடர்ந்து அந்த இளைஞருடன் பேசி வந்ததால், விரைவில் திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவு செய்தனர். அதன்பிறகு அந்த இளைஞருடன் பேசுவதை அந்த மாணவி நிறுத்திவிட்டார்.
undefined
இதையும் படிங்க : G Square : திமுக எம்எல்ஏ வீட்டில் வருமானவரித்துறை திடீர் சோதனை..! முக்கிய ஆவணங்கள் சிக்கியதா.?
இதனால் ஆத்திரமடைந்த இளைஞர் கடந்த சனிக்கிழமை அந்த மாணவியின் உறவினர் வீட்டுக்குச் சென்று அவரை கொலை செய்துள்ளார். இதனிடையே அந்த மாணவியின் உறவினர் அவரை தொலைபேசியில் அழைத்துள்ளார். ஆனால் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை என்பதால், வீட்டிற்கு வந்து பார்த்தபோது சிறுமி இறந்து கிடந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த மாணவியின் உறவினர் திருச்சி தில்லைநகர் காவல்நிலையத்தில் தகவல் அளித்துள்ளார்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டனர். அந்த இளைஞர் மீது கொலை வழக்கு செய்த போலீசார் நேற்று அவரை கைது செய்தனர். அவரிடம் பொலீசார் நடத்திய விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.. தன்னுடன் பேச மறுத்ததால் ஆத்திரத்தில் அந்த மாணவியை இரும்பு கம்பியால் பலமுறை குத்தியும், துப்பாட்டாவால் கழுத்தை நெரித்தும் கொன்றதாக அந்த இளைஞர் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து குற்றம்சாட்டப்பட்ட இளைஞர் சிறார் காப்பகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளார். பேச மறுத்ததால் கல்லூரி மாணவி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க : படித்தது சென்னை ஐஐடியில்.. துபாயில் கைநிறைய சம்பளம்.. காதலிக்காக திருடனாக மாறிய நபர்..