9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை... பெட்டிக்கடைக்காரர் போக்சோவில் கைது!!

By Narendran S  |  First Published Apr 23, 2023, 4:51 PM IST

கன்னியாகுமரி அருகே ஒன்பது வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பெட்டி கடை காரர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


கன்னியாகுமரி அருகே ஒன்பது வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பெட்டி கடை காரர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி அருகே எரும்புக்காடு பகுதியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் 54 வயதான சிவானந்தன் என்பவர் பெட்டிக்கடை நடத்தி வருகிறார்.

இதையும் படிங்க: 12 மணிநேர வேலை மசோதாவை எதிர்த்து ஸ்ட்ரைக்! தொழிற்சங்கங்கள் அறிவிப்பு

Tap to resize

Latest Videos

undefined

இவரது கடைக்கு பொருட்கள் வாங்க வந்த ஒன்பது வயது சிறுமிக்கு சிவானந்தன் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதையடுத்து சிறுமி தனது பெற்றோரிடம் நடந்ததை கூறியதை அடுத்து அவர்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதனிடையே சிவானந்தன் தலைமறைவானார். 

இதையும் படிங்க: மேலே BOSS இருக்கும்போது கீழே இருக்கும் அண்ணாமலையை பற்றி ஏன் கேக்குறீங்க.? ஆவேசமடைந்த எடப்பாடி பழனிசாமி

இந்த நிலையில் சிறுமியிடம் கன்னியாகுமரி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் சாந்தகுமாரி விசாரணை மேற்கொண்டார். பின்னர் தலைமறைவான சிவானந்தனை கைது செய்து போலீஸார், அவர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நாகர்கோவிலில் உள்ள மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

click me!