செங்கல்பட்டு மாவட்டத்தில் இரவில் தூங்கிக் கொண்டிருந்த நபரை தலையில் கல்லை போட்டு கொலை செய்த நபர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டம் பழைய பேருந்து நிலையம் பின்புறம் பார்த்தசாரதி கோவில் தெருவைச் சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 50). பெயிண்டராக வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணமாகவில்லை என்று கூறப்படுகிறது. செங்கல்பட்டு பள்ளிக்கூட தெருவில் உள்ள சட்டமன்ற அலுவலகம் அருகே உள்ள பாழடைந்த வீட்டில் தூங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
இந்நிலையில் மாரிமுத்து தினமும் வழக்கமாக உறங்கும் வீட்டின் அருகே தலை நசுங்கி ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். இது தொடர்பாக செங்கல்பட்டு காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் மாரிமுத்துவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
5 வருடமாக காதலிப்பதாகக் கூறி உல்லாசமாக இருந்துவிட்டு கைவிரித்த காதலன் கைது
மாரிமுத்துவின் மரணம் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட காவல் துறையினர், அவர் இறந்து கிடந்த பகுதியின் அருகே 4 கற்கள் இருந்துள்ளன. மேலும் மாரிமுத்துடன் பிரபா என்பவரும் அந்த பழைய வீட்டில் உறங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தாராம். ஆனால் மாரிமுத்துவின் மரணத்திற்கு பின்னர் பிரபாவை காணவில்லை.
பிரபா, மாரிமுத்து இடையே வாக்குவாதம் ஏற்பட்டு அவர் தலையில் கல்லை போட்டு கொலை செய்துவிட்டு பிரபா மாயமாகி இருக்கலாம் என்று காவல் துறையினர் சந்தேகிக்கின்றனர். தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.