வேலைக்கு சேர்ந்த இளம்பெண்ணை மிரட்டி கதற கதற கூட்டு பலாத்காரம்.. கேரளாவுக்கு கிரேட் எஸ்கேப் ஆன ஓனர்..!

Published : Jun 18, 2021, 02:41 PM IST
வேலைக்கு சேர்ந்த இளம்பெண்ணை மிரட்டி கதற கதற கூட்டு பலாத்காரம்.. கேரளாவுக்கு கிரேட் எஸ்கேப் ஆன ஓனர்..!

சுருக்கம்

வீட்டில் தனியாக இளம்பெண்ணை பேக்கரி உரிமையாளர் மற்றும் கடையில் வேலை செய்த  சமீர் (25) மற்றும் சிகாபுதீன் (27) ஆகியோர் மிரட்டி மாறி மாறி பலாத்காரம் செய்துள்ளனர்.  இதுபற்றி வெளியே சொன்னால் கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்தனர். மீண்டும் இளம்பெண்ணை மிரட்டி பலாத்காரம் செய்தனர். 

வேலைக்கு சேர்ந்த இளம்பெண்ணை மிரட்டி 3 பேர் கொடூரமாக பலாத்காரம்  செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமறைவாக உள்ள கடை உரிமையாளரை தேடி வருகின்றனர். 

திருச்சி மாவட்டம் நாவல்பட்டு ரோட்டை சேர்ந்த 21 வயது இளம்பெண் தனது கணவருடன் திருப்பூரில் தங்கி வேலை செய்து வந்தார். அங்கு வேலை இல்லாததால் வேறு வேலை ஏதாவது கிடைக்குமா என்று தேடி அலைந்துள்ளனர். அப்போது அன்னூரில் பேக்கரி நடத்தி வரும் கேரள மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்த மொய்தீன் குட்டி ( 40) என்பவர் அங்கு சென்றபோது அந்த இளம்பெண் மற்றும் அவரது கணவரிடம் பழக்கம் ஏற்பட்டது.

அவர்களிடம் மொய்தீன் குட்டி தனது பேக்கரியில் வேலை உள்ளதாகவும் தங்க வீடும், நல்ல சம்பளமும் கொடுப்பதாகவும் கூறியுள்ளார். இதையடுத்து அந்த இளம்பெண் தனது கணவருடன் தங்கி பேக்கரியில் வேலை செய்து வந்தார். இந்நிலையில்,  ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் பேக்கரி மூடப்பட்டது. இதனால் பேக்கரியில் வேலை இல்லாததால் அந்த இளம் பெண்ணின் கணவர் அருகே உள்ள பஞ்சு மில்லுக்கு வேலைக்கு சென்றார்.

அப்போது, வீட்டில் தனியாக இளம்பெண்ணை பேக்கரி உரிமையாளர் மற்றும் கடையில் வேலை செய்த  சமீர் (25) மற்றும் சிகாபுதீன் (27) ஆகியோர் மிரட்டி மாறி மாறி பலாத்காரம் செய்துள்ளனர்.  இதுபற்றி வெளியே சொன்னால் கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்தனர். மீண்டும் இளம்பெண்ணை மிரட்டி பலாத்காரம் செய்தனர். 

பின்னர், கணவரிடம் நடந்தவற்றை கூறி கதறி அழுதுள்ளார். உடனே இதுதொடர்பாக துடியலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி பேக்கரியில் வேலை செய்து வந்த சமீர் மற்றும் சிகாபுதீன் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், கேரளாவிற்கு தப்பிச்சென்ற பேக்கரி உரிமையாளர் கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

PREV
click me!

Recommended Stories

சினிமா மிஞ்சும் திகில்.. காட்டிக்கொடுத்த காலி மதுபாட்டில்கள் பார் கோடுகள்.. பெண் கொலை வழக்கில் ஓய்வு பெற்ற காவலர் கைது
அரைகுறை ஆடையுடன் அமர்ந்திருந்த ஸ்ரேயா! கதறியும் விடாத தந்தை, மகன்! இறுதியில் நடந்த அதிர்ச்சி!