யூ டியூப்பில் மன்மத விளையாட்டு.... சிக்கினார் யூ- டியூபர் மதன்..!

Published : Jun 18, 2021, 11:00 AM IST
யூ டியூப்பில் மன்மத விளையாட்டு.... சிக்கினார் யூ- டியூபர் மதன்..!

சுருக்கம்

யூடியூபில் ஆபாசமாக ஆடியோவை வெளியிட்ட மதன் தருமபுரியில் தலைமறைவாக இருந்த நிலையில் தனிப்படை போலீசார் சுற்றி வளைத்து மதனை கைது செய்துள்ளனர்.

சிறுவர், சிறுமிகளிடம் ஆபாசமாக பேசியது உள்ளிட்ட 159 க்கும் மேற்பட்ட புகார்கள் குவிந்த நிலையில், தலைமறைவாக இருந்த யூ- டியூபர் மதனை தருமபுரியில் தனிப்படை போலிசார் கைது செய்தனர்.

தடைசெய்யப்பட்ட பப்ஜி ஆன்லைன் கேமில் விளையாடுவது எப்படி போன்ற வீடியோக்களை யூ-டியூப்பில் பதிவிட்டு மாதம் 7 லட்சம் ரூபாய் வரை சம்பாதித்தவர் மதன். இதனால் இவரை 'பப்ஜி மதன்' என்றே பலரும் அழைத்தனர். ஆரம்பத்தில் பப்ஜி விளையாட்டின் நுணுக்கங்களை பற்றி கூறிய இவர், பிறகு  தன்னோடு விளையாடும் சக பெண்களிடம் கொச்சையாகவும், பாலியல் ரீதியாகவும் பேசி வந்தார். அவரின் இந்த பேச்சை ரசித்து 8 லட்சத்துக்கும் அதிகமானோர் அவரை பின்தொடர்ந்து வந்துள்ளனர்.

அப்படி பின்தொடர்பவர்களிடமிருந்து அவர் குறிப்பிட்ட அளவு தொகையையும் வசூலித்திருக்கிறார்.  அவரது பேச்சிக்காகவும், அவரது பாலியல் சீண்டல்களுக்காகவும் அவர் மேல் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. 159 புகார்கள் அவர் மீது பதிவாகியுள்ளன. இதனால் அவர் தலைமறைவானார். அதன் பின் அவரது  யூ-டியூப் பக்கத்தை நிர்வகித்து வந்ததற்காக அவரது மனைவி கைதுசெய்யப்பட்டார். இந்த நிலையில் தலைமறைவாக இருந்த பப்ஜி மதனை தனிப்படை போலீசார் கடந்த 3, 4 நாட்களாக தமிழகம் முழுவதும் தீவிரமாக தேடிவந்தனர்.

 

இந்த நிலையில், யூடியூபில் ஆபாசமாக ஆடியோவை வெளியிட்ட மதன் தருமபுரியில் தலைமறைவாக இருந்த நிலையில் தனிப்படை போலீசார் சுற்றி வளைத்து மதனை கைது செய்துள்ளனர்.

PREV
click me!

Recommended Stories

அடச்சீ.. இப்படி ஒரு தாயா? 31 வயது கள்ளக்காதலனுக்கு 18 வயது மகளை திருமணம் செய்து வைத்த கொடூரம்
பட்டப்பகலில் நடந்த அதிர்ச்சி.. காப்பாத்துங்க.. காப்பாத்துங்க.. கணவன் கண்முன்னே அலறிய மனைவி..