அன்றாடம் பொண்டாட்டியை வச்சு செய்த குடிகார கணவன்..!! பொறுக்க முடியாமல் அறுத்துத் தள்ளிய கோவக்கார மாமனார்..!!!

Published : Jan 04, 2020, 03:56 PM ISTUpdated : Jan 04, 2020, 05:20 PM IST
அன்றாடம் பொண்டாட்டியை வச்சு செய்த  குடிகார கணவன்..!!  பொறுக்க முடியாமல் அறுத்துத் தள்ளிய கோவக்கார மாமனார்..!!!

சுருக்கம்

அப்போது  பிரபாகரனுக்கும் மருமகன் காந்திராஜனுக்கும்  இடையே வாய்த் தகராறு ஏற்பட்டுள்ளது .  இதில் வாக்குவாதம் முற்றி இருவருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது .    

மகளுடன் வாழ மறுத்ததுடன் அன்றாடம் குடித்துவிட்டுவந்து  தகராறில் ஈடுபட்டு வந்த மருமகனை மாமனார் பிளேடால் அறுத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .  சென்னை அயனாவரம் பகுதியை சேர்ந்தவர் பிரபாகர் ,  இவரது மனைவி கலைவாணி இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர் மூத்த மகள் பெயர் சந்தியா இவர் அதே பகுதியில்  சென்ட்ரிங் வேலை செய்து வந்த காந்திராஜன் என்பவரை காதலித்துவந்தார் இதனால் பெற்றோர்களின் சம்மதத்துடன்  இருவருக்கும் திருமணம் நடத்திவைக்கப்பட்டது. 

இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர் ஆனால் திருமணம் ஆனது முதல் காந்திராஜன் அன்றாடம் குடித்து விட்டு வந்து மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது .  இந்நிலையில் கடந்த வாரம் காந்திராஜன்  வீட்டிற்கு குடித்துவிட்டு வந்தது மனைவியை சரமாரியாக அடித்து உதைத்துள்ளார் .  இதனால் கோபித்துக் கொண்டு மனைவி பக்கத்து தெருவில் உள்ள  தாய் வீட்டிற்கு சென்று விட்டார் ,  இதனையடுத்து மகளை சமாதானம் செய்து கணவனுடன் சேர்ந்து வாழ வைக்க பிரபாகர் கலைவாணி தம்பதியினர் ,  காந்திராஜன் வீட்டிற்கு மகளை  அழைத்து வந்துள்ளனர் .  அப்போது  பிரபாகரனுக்கும் மருமகன் காந்திராஜனுக்கும்  இடையே வாய்த் தகராறு ஏற்பட்டுள்ளது .  இதில் வாக்குவாதம் முற்றி இருவருக்கும் இடையேகைகலப்பு ஏற்பட்டது .  

அதில் ஆத்திரமடைந்த  பிரபாகர் ,  பொண்டாட்டியை  வைத்து முறையா குடும்பம் நடத்த துப்பில்ல  என்னை அடிக்க வருகிறாயா.?  என கேட்டு,  தான் மறைத்து வைத்திருந்த பிளேடால் மருமகன் காந்திராஜனை சரமாரியாக அறுத்துத் தள்ளினார்,  இதில் கழுத்து முகம் என பலிடங்களில்  அறுபட்டு படுகாயமடைந்தார் காந்திராஜன் ,  பாலம்பாலமாக அறுபட்டதில்  ரத்தவெள்ளத்தில் மயங்கினார் காந்திராஜன்,   உடனே அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு கீழ்பாக்கம் அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர் .  இச்சம்பவம் தொடர்பாக அயனாவரம் போலீசார் பிரபாகர் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர்.  மாமனார் மருமகனை பிளேடால் அறுத்துதள்ளியுள்ள  இந்த  சம்பவம்  மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 

PREV
click me!

Recommended Stories

இரவு பகல் பாராமல் எந்நேரமும் ஓயாமல் டார்ச்சர்! அதிமுக பிரமுகரின் மகளை இதற்காக தான் கொன்றேன்!
இரண்டு குழந்தைகளின் தாய் செய்ற வேலையா இது.. பழைய காதலனுக்காக புருஷனை போட்டு தள்ளிய மனைவி