தொடரும் ஆபாச பட வேட்டை..! பட்டதாரி இளைஞர் போக்சோவில் கைது..!

Published : Jan 30, 2020, 12:03 PM ISTUpdated : Jan 30, 2020, 12:07 PM IST
தொடரும் ஆபாச பட வேட்டை..! பட்டதாரி இளைஞர் போக்சோவில் கைது..!

சுருக்கம்

சென்னை அம்பத்தூரைச் சேர்ந்தவர் ஹரிஷ். பி.எஸ்.சி பட்டதாரியான இவர் கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக தனது செல்போனில் சிறார் ஆபாச படங்களை தரவிறக்கம் செய்து பார்த்து வந்திருக்கிறார். 

ஆபாச படம் பார்ப்பவர்கள் உலகவில் இந்தியாவில் தான் அதிகமானோர் இருப்பதாக சமீபத்தில் ஆய்வு ஒன்று வெளியாகியது. அதிலும் தமிழகத்தில் குழந்தைகள் ஆபாச படத்தை பலர் பார்ப்பதாக அதிர்ச்சி தகவல் வந்தது. இதனையடுத்து இதுகுறித்து நடவடிக்கை எடுக்க மத்திய உள்துறை தமிழக காவல்துறைக்கு உத்தரவிட்டது. அதன்படி ஆபாச படத்தை பரப்புபவர்களை காவலர்கள் அதிரடியாக கைது செய்தனர்.

முதலில் திருச்சியை சேர்ந்த கிறிஸ்டோபர் என்பவர் கைது செய்யப்பட்டார். பள்ளி,கல்லூரி மாணவர்களுக்கு ஆபாச படங்களை இவர் பரப்பியதாக வழக்கு பதியப்பட்டுள்ளது. அதன்பிறகு சென்னையை சேர்ந்த 72 வயதான மோகன் என்னும் முதியவர் கல்லூரி மாணவிகளுக்கு ஆபாச படத்தை அனுப்பி சிக்கினார். அடுத்து கோவையில் இரண்டு பேர் கைதாகினர். பின் சென்னை சேத்துப்பட்டைச் சேர்ந்த சுமித்குமார் கல்ரா என்கிற தொழிலதிபர் கைது செய்யப்பட்டார்.

தொடர்ந்து திருச்சியில் ஆபாச படங்களை தரவிறக்கம் செய்து பரப்பியதாக காதர்பாட்சா, ஷேக் அப்துல்லா என இரண்டு வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் சென்னையில் தற்போது சிறார் ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்ததாக வாலிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை அம்பத்தூரைச் சேர்ந்தவர் ஹரிஷ். பி.எஸ்.சி பட்டதாரியான இவர் கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக தனது செல்போனில் சிறார் ஆபாச படங்களை தரவிறக்கம் செய்து பார்த்து வந்திருக்கிறார். 

இதுகுறித்து விசாரணை செய்த நகர பெண்கள், குழந்தைகள் குற்ற தடுப்பு பிரிவு போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து ஹரிஷை அதிரடியாக கைது செய்தனர். சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Also Read:  'கருணாநிதி ஒரு தீவிரவாதி'..! தம்பிகளிடம் பகீர் கிளப்பிய சீமான்..!

PREV
click me!

Recommended Stories

இரவு பகல் பாராமல் எந்நேரமும் ஓயாமல் டார்ச்சர்! அதிமுக பிரமுகரின் மகளை இதற்காக தான் கொன்றேன்!
இரண்டு குழந்தைகளின் தாய் செய்ற வேலையா இது.. பழைய காதலனுக்காக புருஷனை போட்டு தள்ளிய மனைவி