கொலை மர்மம்;விசாரணையும் மர்மம்; நீதி கேட்கும் முதல்வர் தங்கச்சி..!

By Asianet TamilFirst Published Jan 30, 2020, 1:09 AM IST
Highlights

சந்திரபாபு நாயுடு முதல்வராக இருந்த போது சிபிஜ விசாரணை வேண்டும் என்று கேட்ட ஜெகன்மோகன் அவரே ஆட்சி பொறுப்புக்கு வந்த பிறகு ஏன் சிபிஜ விசாரணைக்கு உத்தரவிடவில்லை என்கிற சந்தேகம் சுனிதா ரெட்டிக்கு வந்திருக்கிறது. 

கொலை மர்மம்;விசாரணையும் மர்மம்; நீதி கேட்கும் முதல்வர் தங்கச்சி..!

தனது தந்தையின் கொலை வழக்கில் நீதி வேண்டும் என்று ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி சித்தப்பா மகள் சுனிதா நீதிமன்றம் படியேறியிருக்கிறார்.
ஜெகன் மோகன் ரெட்டியின் தந்தை ராஜசேகர்ரெட்டியின் உடன் பிறந்த தம்பி விவேகானந்த ரெட்டி. இவர் கடப்பா மாவட்டம் புலிவெந்துலாவில் தனது குடும்பத்துடன் வாழ்ந்து வந்தார். விவேகானந்தா ரெட்டி ஒருங்கிணைந்த ஆந்திராவின் வேளாண்மை துறை அமைச்சராக பணியாற்றியவர். இவரது குடும்பம் ஹைத்ராபாத்தில் இருக்கிறார்கள். ஆனால் விவேகானந்த ரெட்டி தனது அரசியல் விசயங்களுக்காக அவ்வப்போது கடப்பா வந்து செல்லுவார். இதுபோன்று வழக்கமாக வந்து செல்லும் போது 2019ம் ஆண்டு மார்ச் மாதம் 15ம் தேதி தனது வீட்டிற்குள் ஏழு இடங்களில் வெட்டப்பட்டு ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்தார். 
இந்த கொலையை விசாரிக்க அன்றைய முதல்வர் சந்திரபாவு நாயுடு கூடுதல் டிஜிபி அமித்கான் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழுவை நியமித்தார். அப்போது எதிர்கட்சியாக இருந்த ஜெகன்மோகன் ரெட்டி இந்த கொலை வழக்கை சிபிஐ விசாரணை நடத்த வேண்டும். இந்த கொலையில் தெலுங்கு தேசம் கட்சியினர் மீது சந்தேகம் இருப்பதாகவும் தெரிவித்தார்.
ஜெகன் மோகன் ரெட்டி ஆந்திர முதல்வராக ஆட்சிக்கு வந்து ஏழு மாதங்கள் கடந்து விட்டது. இரண்டாவது முறையாக தன்னுடைய சித்தப்பா கொலை வழக்கை விசாரிக்க சிறப்பு விசாரணைக்குழு அமைத்திருக்கிறார். 
சந்திரபாபு நாயுடு முதல்வராக இருந்த போது சிபிஜ விசாரணை வேண்டும் என்று கேட்ட ஜெகன்மோகன் அவரே ஆட்சி பொறுப்புக்கு வந்த பிறகு ஏன் சிபிஜ விசாரணைக்கு உத்தரவிடவில்லை என்கிற சந்தேகம் சுனிதா ரெட்டிக்கு வந்திருக்கிறது. இந்த கேள்விக்கு பதில் அளிக்க முடியாமல் ஜெகன் மோகன் ரெட்டி தர்மசங்கடத்தில் இருக்கிறார்.
T>Balamurukan

click me!