8 மாத கர்ப்பதை தொப்பை என நாடகமாடிய மகள்.. ஆஸ்பத்திரியில் குவா குவா.. போக்சோவில் காதலன் கைது.

Published : Oct 03, 2022, 02:39 PM IST
8 மாத கர்ப்பதை தொப்பை என நாடகமாடிய மகள்.. ஆஸ்பத்திரியில் குவா குவா.. போக்சோவில் காதலன் கைது.

சுருக்கம்

காதலிப்பது போல நடித்து 17 வயது சிறுமியை கர்ப்பமாக்கி மோசடி செய்த  காதலனை  போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். காதலனால் அந்தப் சிறுமி கர்ப்பமான நிலையில், 8 மாத கர்ப்பத்தை பெற்றோர்களிடம் தொப்பை என அந்த சிறுமி ஏமாற்றி வந்த நிலையில் அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.  

காதலிப்பது போல நடித்து 17 வயது சிறுமியை கர்ப்பமாக்கி மோசடி செய்த  காதலனை  போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். காதலனால் அந்தப் சிறுமி கர்ப்பமான நிலையில், 8 மாத கர்ப்பத்தை பெற்றோர்களிடம் தொப்பை என அந்த சிறுமி ஏமாற்றி வந்த நிலையில் அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.

முழு விவரம் பின்வருமாறு:-  சென்னை ராமாபுரம் பகுதியைச் சேர்ந்த  இளம்பெண் ஒருவர் வீட்டுக்கு அருகில் உள்ள துணிக்கடையில் வேலை செய்து வந்தார். அந்தப் பெண்ணுக்கும் டிஎல்எஃப் அருகே ஹோட்டல் ஒன்றில் பணியாற்றி வந்த 28 வயதான ஆம்புரோஸ் என்பவருக்கும் இடையே காதல் ஏற்பட்டது. அதனையடுத்து இருவரும் அடிக்கடி தனிமையில் பழகி வந்தனர்.

இந்த சிறுமியை பல இடங்களுக்கு அழைத்துச் சென்று ஆம்புரோஸ் உல்லாசத்தில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் அந்த பெண் கர்ப்பமானார். அதுகுறித்து காதலனிடம் கூறியதற்கு திருமணம் செய்து கொள்ளலாம், அதுவரை வெளியில் யாரிடமும்  கூறவேண்டாம் என தெரிவித்துள்ளார். இதனால்

இதையும் படியுங்கள்: என் அம்மாவின் கள்ளக்காதலன் என்னை நாசம் பண்ணிட்டான்.. ஃபர்ஸ்ட் நைட்டில் கணவனுக்கு ஷாக் கொடுத்த இளம்பெண்.!

வீட்டுக்குத் தெரியாமல் கர்ப்பத்தை அந்தச் சிறுமி மறைத்து வந்தார். நாளடைவில்  கர்ப்பம் வெளியில் தெரிய ஆரம்பித்தது, அதுகுறித்து பெற்றோர்கள் கேட்டதற்கு வயிறு தொப்பை போட்டு விட்டது என அந்தப் சிறுமிகூறி சமாளித்து வந்தார். கடந்த மாதம் 25ஆம் தேதி அந்தப் சிறுமிக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டது. பின்னர் பெற்றோர் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

இதையும் படியுங்கள்: RSS, இந்து அமைப்புகளின் தலைவர்கள் உயிருக்கு அச்சுறுத்தல்.. உளவுத்துறை அலர்ட்.. துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு.

அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அந்த சிறுமி கர்ப்பமாக இருப்பதாக கூறினர், அதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர்கள் காதலன் ஆம்பூரோசை போனில் தொடர்புகொண்டு, தங்கள் மகளைத் திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டனர். ஆனால் காதலன் அம்புரோஸ் அதை ஏற்க மறுத்துவிட்டார். முன்னதாக கடந்த மாதம் 30ஆம் தேதி அந்த சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்தது. 

பின்னர் இதுகுறித்து வளசரவாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதைகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர், அதில் இளம்பெண்ணை ஆசைவார்த்தை கூறி கர்ப்பமாக்கிவிட்டு, தப்பிக்க முயற்சித்த காதலன் அம்ரோஸ்சை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். 
 

PREV
click me!

Recommended Stories

அரைகுறை ஆடையுடன் அமர்ந்திருந்த ஸ்ரேயா! கதறியும் விடாத தந்தை, மகன்! இறுதியில் நடந்த அதிர்ச்சி!
திருமணமான பெண்ணுடன் பழகுவதை நிறுத்திடு! கண்டித்த வேல்குமார்! நடுரோட்டில் கதறவிட்ட அதிர்ச்சி!