கடந்த ஜனவரி 31ம் தேதி வீட்டில் கள்ளக்காதலி இல்லாத நேரத்தில் பாலமுருகன் சென்றார். அப்போது அங்கு தனியாக இருந்த கள்ளக்காதலியின் 18 வயதான மகளை கட்டாயப்படுத்தி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
கள்ளக்காதலியின் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் அக்குபஞ்சர் மருத்துவர் பாலமுருகன் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
தஞ்சை கீழவாசல் ராவுத்தர் பாளையத்தை சேர்ந்தவர் பாலமுருகன் (43). அக்குபஞ்சர் மருத்துவர். அப்பகுதியில் கிளினிக் நடத்தி வருகிறார். இவருக்கும், தஞ்சையை சேர்ந்த 40 வயதான விதவை பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதையடுத்து அந்தபெண்ணின் வீட்டுக்கு பாலமுருகன் அடிக்கடி சென்று வந்துள்ளார்.
கடந்த ஜனவரி 31ம் தேதி வீட்டில் கள்ளக்காதலி இல்லாத நேரத்தில் பாலமுருகன் சென்றார். அப்போது அங்கு தனியாக இருந்த கள்ளக்காதலியின் 18 வயதான மகளை கட்டாயப்படுத்தி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதேபோல் அடிக்கடி கள்ளக்காதலி இல்லாத நேரத்தில் அவரது வீட்டுக்கு சென்று அவரது மகளை மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்தார். மேலும் வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளார்.
இந்நிலையில், கள்ளக்காதலியின் மகளுக்கு கடந்த ஒரு மாதத்துக்கு முன் திருமணம் நடந்தது. கணவன் வீட்டுக்கு சென்ற அவர், முதலிரவு அன்று பதற்றத்துடன் காணப்பட்டார். இதில், சந்தேகமடைந்த கணவர், அவரது மனைவியிடம் கேட்டுள்ளார். அப்போது நடந்த சம்பவத்தை பதற்றத்துடன் கணவரிடம் கூறி பெண் கதறி அழுதுள்ளார். இது பெண்ணின் தாய்க்கு தெரியவந்தது. இதுகுறித்து தஞ்சை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தாய் புகார் செய்தார். இதனையடுத்து, அக்குபஞ்சர் மருத்துவர் பாலமுருகன் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.