பாபநாசம் பட பாணியில் கொன்று வீட்டில் புதைக்கப்பட்ட இளைஞர்.. துர்நாற்றம் வீசாமல் இருக்க என்ன செய்தார் தெரியுமா?

Published : Oct 03, 2022, 01:50 PM IST
பாபநாசம் பட பாணியில் கொன்று வீட்டில் புதைக்கப்பட்ட இளைஞர்.. துர்நாற்றம் வீசாமல் இருக்க என்ன செய்தார் தெரியுமா?

சுருக்கம்

கேரளாவில் பாபநாசம் பட பாணியில் இளைஞரை கொன்று வீட்டில் புதைக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக குற்றவாளியை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

கேரளாவில் பாபநாசம் பட பாணியில் இளைஞரை கொன்று வீட்டில் புதைக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக குற்றவாளியை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

கேரளா மாநிலம் ஆலுவா பகுதியை சேர்ந்தவர் பிந்து குமார் (43). இவர் கடந்த 26ம் தேதி முதல் திடீரென மாயமானார். இதனையடுத்து, குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால் அதிர்ச்சியில் எர்ணாகுளம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரை அடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக தேடிவந்தனர்.

இந்நிலையில், அவரது செல்போன் அழைப்புகளை ஆய்வு செய்தனர். அவருடன் கடைசியாக பேசிய முத்துக்குமாரை விசாரிக்க திட்டமிட்டனர். இதனையடுத்து, முத்துகுமாரை தேடி அவரது வீட்டிற்கு சென்ற போது அவர் குடும்பத்துடன் வெளியூர் சென்றதாக அக்கம் பக்கத்தினர் கூறியுள்ளனர். இதற்கிடையே வீட்டை சுற்றி பரிசோதனை செய்த போது சந்தேகத்திற்கு இடமான வகையில் குழி தோண்டி மூடப்பட்டிருந்தது. இதையடுத்து சந்தேகம் அடைந்த போலீசார் அந்த பகுதியில் தோண்டிய போது அழுகிய நிலையில் ஒரு உடல் கண்டெடுக்கப்பட்டது. துர்நாற்றம் வெளியே வராமல் இருக்க அதற்கு மேல் கான்கிரீட் போட்டு அதற்கு மேல் மீண்டும் மண்ணை நிரப்பியது தெரியவந்தது.

இதனையடுத்து, உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறுதியில் அது பிந்து குமாரின் உடல் தான் என்பது உறுதியானது. இதனிடையே, தலைமறைவாக இருந்த முத்துக்குமாரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

அறைகுறை ஆடையுடன் அமர்ந்திருந்த ஸ்ரேயா! கதறியும் விடாத தந்தை, மகன்! இறுதியில் நடந்த அதிர்ச்சி!
திருமணமான பெண்ணுடன் பழகுவதை நிறுத்திடு! கண்டித்த வேல்குமார்! நடுரோட்டில் கதறவிட்ட அதிர்ச்சி!