சென்னையில் பயங்கரம்.. முகத்தை சிதைத்து பாஜக பிரமுகர் கொடூரமாக வெட்டிக் படுகொலை..!

By vinoth kumar  |  First Published Sep 19, 2023, 3:03 PM IST

சென்னை தாம்பரம் அடுத்த பழைய பெருங்களத்தூர் பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் (33). ரவுடியான இவர் மீது கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்து வருகிறது. 


சென்னை அருகே பாஜக எஸ்சி அணி மண்டல தலைவர் பீரி வெங்கடேசன் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை தாம்பரம் அடுத்த பழைய பெருங்களத்தூர் பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் (33). ரவுடியான இவர் மீது கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்து வருகிறது. பாஜகவில் பட்டியலின மண்டல தலைவராக பொறுப்பு வகித்து வருகிறார். 

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க;- அண்ணியை கழுத்தறுத்து படுகொலை செய்த கொழுந்தன்.. நடந்தது என்ன? பரபரப்பு தகவல்..!

இந்நிலையில் மேற்கு தாம்பரம் குட்வில் நகரில் உள்ள காலி மனையில் முட்புதர் ஒன்றில் முகம் சிதைக்கப்பட்ட நிலையில் கொடூரமாக கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில்  பீரி வெங்கடேசன் சடலமாக கிடந்தார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதியில் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் பீரி வெங்கடேசன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இதையும் படிங்க;- TTF Vasan Arrest: வீலிங் செய்து வில்லங்கத்தை விலைக்கு வாங்கிய டிடிஎஃப் வாசன்.. ஹாஸ்பிடலில் வைத்தே கைது..!

இந்த கொலை சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் பழிக்குப்பழியாக இந்த கொலை நடைபெற்றதா என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர். 

click me!