பெண்ணை தலையில் கல்லைப்போடு கொடூரமாகக் கொன்று, உடலை இழுத்து செல்லும் காட்சிகள் அப்பகுதியில் இருக்கும் கடையில் இருக்கும் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
திருப்பூர் அவிநாசி-மங்கலம் சாலையில் உள்ள ஒரு கடை முன்பு மனநிலை பாதித்த பெண் ஒருவர் தங்கியிருந்து வந்தார். இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் திடீரென அந்த பெண்ணின் தலையில் பெரிய கல்லைப் போட்டு கொலை செய்தார்.
பின்னர், உயிரிழந்த பெண்ணின் உடலை அருகில் இருக்கும் மழைநீர் வடிகால் கால்வாய் பகுதிக்கு இழுத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இன்று (திங்கட்கிழமை) காலை அந்தப் பெண்ணின் சடலம் கால்வாய் பகுதியில் கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் அவிநாசி காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தள்ளனர்.
undefined
நாமக்கல் சிறுமி உயிரிழந்த சோகம்... திமுக ஆட்சியில் தொடர லாயக்கில்லை: எடப்பாடி பழனிச்சாமி கண்டனம்
தகவல் கிடைத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை செய்யப்பட்ட பெண்ணின் பின்னணி குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்தப் பெண் தலையில் கல்லைப்போடு கொடூரமாகக் கொல்லப்பட்டு, உடலை இழுத்து செல்லும் காட்சிகள் அப்பகுதியில் இருக்கும் கடையில் இருக்கும் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. காவல்துறையினர் அந்த சிசிடிவி வீடியோவை வைத்து குற்றவாளியை தேடும் பணியைத் தொடங்கியுள்ளனர்.
மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை கொன்று பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் திருப்பூரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.