போஜ்புரி பாடகர் பபுல் பீகார் கைது செய்யப்பட்டுள்ளார்
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து, இணையத்தில் அச்சிறுமியின் அந்தரங்க புகைப்படங்களை பதிவேற்றியதாக போஜ்புரி பாடகர் பபுல் பீகார் கைது செய்யப்பட்டுள்ளார்.
பீகார் பிராந்தியத்தை சார்ந்த போஜ்புரி மொழிப் பாடகர் பபுல் பீகாரி (21). இளம் பாடகரான இவர் அப்பகுதியில் மிகவும் பிரபலமானவர். இவரை சமூக வலைதளங்களில் ஏராளமானோர் பின் தொடர்ந்து வருகின்றனர். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இவர் வசித்து வந்த பகுதியில் 13 வயதான சிறுமி ஒருவரும் வசித்து வந்துள்ளார். அப்போது இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இதனை பயன்படுத்திக் கொண்ட பபுல் பீகார், சிறுமியை ஆசை வார்த்தை காட்டி ஹோட்டல் ஒன்றுக்கு வரவழைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அத்துடன், சிறுமியின் அந்தரங்க புகைப்படங்களையும் அப்போது அவர் எடுத்து வைத்து கொண்டதாக கூறப்படுகிறது. நாளடைவில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட மனக்கசப்பு காரனமாக சிறுமி பபுல் பீகாரியை விட்டு விலகிச் சென்றுள்ளார். இருப்பினும், சிறுமியை அவர் தொடர்ந்து தொந்தரவு செய்து வந்துள்ளதாக தெரிகிறது.
இந்த நிலையில், சிறுமியின் அந்தரங்க புகைப்படங்களை பபுல் பீகாரி சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். இது பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்துக்கு தெரியவந்ததும் சிறுமியை அழைத்து அவர்கள் விசாரித்துள்ளனர். அப்போது, பாதிக்கப்பட்ட சிறுமி தனக்கு நேர்ந்த் கொடுமைகளை தெரிவித்துள்ளார்.
நாட்டை உலுக்கிய லிவ்-இன் பார்ட்னர் கொலைகள்!
இதையடுத்து, சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில், வழக்குபதிவு செய்த போலீசார், போஜ்புரி பாடகர் பபுல் பீகாரியை கைது செய்துள்ளனர். அவர் மீது, போக்சோ உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.