கோவையில் ஆட்டோ ஓட்டுநர் எரித்துக் கொலை; உறவினர்கள் சந்தேகம்

By Velmurugan s  |  First Published Jan 23, 2023, 3:04 PM IST

கோவை மாவட்டம் காளப்பாடி அருகே லோடு ஆட்டோ ஓட்டுநர் பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்யப்பட்ட நிலையில் அவரது குழந்தைகளின் கல்வி செலவை அரசே ஏற்க வேண்டும் என்று அவரது உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


கோவை காளப்பட்டி அருகே உள்ள வீரியம்பாளையத்தை சேர்ந்த ரவி (47). மினி லோடுஆட்டோ ஓட்டுனராக பணிபுரிந்த.இவர் நேற்று காலை தனது ஆட்டோவில் மணிகண்டன் என்பவரிடம் பேசிக்கொண்டு இருந்தாா். அப்போது அங்கு வந்த இளைஞர் ஒருவர் தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை ரவி மீது ஊற்றி தீயை பற்ற வைத்தார். தீ வைத்துவிட்டு அங்கிருந்து தப்ப முயன்ற நபரை பிடித்த பொதுமக்கள் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

பழனி முருகன் கோவிலுக்கு புதிய ரயில் பெட்டியை நன்கொடையாக வழங்கிய பக்தர்

Latest Videos

undefined

தீ வைக்கப்பட்டதில் ரவி படுகாயம் அடைந்தார். இதைத்தொடர்ந்து பொது மக்களின் உதவியுடன் ரவியை 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இருப்பினும் சிகிச்சை பலன் இன்றி ரவி நேற்று மாலை உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து பீளமேடு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையி்ல், ரவி மீது பெட்ரோலை ஊற்றி எரித்தது நேரு நகரில் வசித்து வரும் விருதுநகரை சோ்ந்த பூமாலை ராஜா என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து ரவியின் உறவினர்கள் குற்றவாளி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், ரவியின் இரண்டு பெண் குழந்தைகளுக்கும் கோவை மாவட்ட நிர்வாகம் கல்வி உள்ளிட்ட பொருளாதார உதவிகளை செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வைத்து மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.

தடுப்பணைக்கு கிடா வெட்டி நூற்றாண்டு விழா கொண்டாடிய கிராம மக்கள்

இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக பீளமேடு காவல் நிலைய அதிகாரிகள் கொலை செய்த நபர் வேலையில்லாத விரக்தியில் கொலை செய்ததாக தெரிவிக்கின்றனர். ஆனால் காவல் துறையினர் அளிக்கும் விளக்கத்தை ஏற்க மறுக்கும் உறவினர்கள் உரிய விசாணை நடத்தி தீ வைத்ததற்கான காரணத்தை கண்டறிய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

click me!