கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வெட்டூர்ணிமடம் பகுதியை சேர்ந்தவர் அபிஷேக் (22). இவர் நாகர்கோவில் பகுதியில் உள்ள ஒரு பாலிடெக்னிக் கல்லூரியில் படித்தபோது சக மாணவி ஒருவரிடம் நெருங்கி பழகியுள்ளார்.
குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து மிரட்டல் விடுத்து வெளிநாடு தப்பிய வாலிபர் இரண்டரை ஆண்டுகளுக்கு பிறகு ஊர் திரும்பிய நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வெட்டூர்ணிமடம் பகுதியை சேர்ந்தவர் அபிஷேக் (22). இவர் நாகர்கோவில் பகுதியில் உள்ள ஒரு பாலிடெக்னிக் கல்லூரியில் படித்தபோது சக மாணவி ஒருவரிடம் நெருங்கி பழகியுள்ளார். அந்த சமயத்தில் மாணவியிடம் அபிஷேக் காதலை கூறியுள்ளார். ஆனால், மாணவி அவருடைய காதலை ஏற்கவில்லை என கூறப்படுகிறது. எனினும் இருவரும் நண்பர்களாக பழகி வந்துள்ளனர்.
இதையும் படிங்க;- சென்னை அடுக்குமாடி குடியிருப்பில் மஜாவாக நடைபெற்ற விபச்சாரம்.. கல்லா கட்டிய பிஸ்னஸ்க்கு ஆப்பு வைத்த போலீஸ்.!
இந்நிலையில், மாணவியிடம் நைசாக பேசிய அபிஷேக் அவரை நண்பரின் வீட்டுக்கு வரவழைத்து குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பலாத்காரம் செய்துள்ளார். இதை வீடியோவாக பதிவு செய்துள்ளார். இந்த விவகாரத்தை வெளியே சொன்னால் ஆபாச வீடியோவை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டு விடுவேன் என மிரட்டி வந்துள்ளார். இதனால் பயந்து போன மாணவி யாரிடமும் கூறாமல் இருந்து வந்துள்ளார். நாளுக்கு நாள் அபிஷேக்கின் தொல்லை அதிகரிக்கவே வேறு வழியில்லாமல் மாணவி தனக்கு நடந்த கொடுமையை பெற்றோரிடம் கூறி கதறி அழுதுள்ளார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் நாகா்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரை அடுத்து அபிஷேக் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
இதையும் படிங்க;- ரயில் நிலையத்தில் வருமான வரித்துறை பெண் அதிகாரியிடம் கண்ட இடத்தில் கை வைத்து இளைஞர் பாலியல் சீண்டல்..!
இந்த சம்பவம் கடந்த 2020-ம் ஆண்டு நடந்தது. மாணவி புகார் கொடுத்ததை அறிந்ததும் அவர் துபாய்க்கு சென்று தலைமறைவானார். தலைமறைவானவர் கைது அவரை பிடிக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வந்தனர். இந்நிலையில், இரண்டரை ஆண்டுகளுக்கு பிறகு நேற்று முன்தினம் அபிஷேக் துபாயில் இருந்து சொந்த ஊருக்கு வந்துள்ளதாக நாகர்கோவில் மகளிர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே போலீசார் அதிரடியாக அவருடைய வீட்டுக்கு விரைந்து சென்று அபிஷேக்கை கைது செய்தனர்.