சென்னையில் ஆட்டோ டிரைவர் தலை, கைகள் இல்லாத நிலையில் படுகொலை.. என்ன காரணம் தெரியுமா? வெளியான பகீர் தகவல்.!

Published : Jun 06, 2022, 11:09 AM IST
சென்னையில் ஆட்டோ டிரைவர் தலை, கைகள் இல்லாத நிலையில் படுகொலை.. என்ன காரணம் தெரியுமா? வெளியான பகீர் தகவல்.!

சுருக்கம்

அதன்படி சம்பவத்தன்று சிராஜூதீனும், மகேஷூம் மது அருந்தி விட்டு இருவரும் ஜூனத் வீட்டிற்கு வந்துள்ளனர். அப்போது ஜூனத்தின் மகள்களிடம் சிராஜூதீன் ஆபாசமாக நடந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மகேஷ், சிராஜூதீனை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் அவர் உயிரிழந்தார். 

பூந்தமல்லி அருகே தலை மற்றும் 2 கைகள் இல்லாத ஆண் சடலம் எரிக்கப்பட்ட நிலையில் அவர் யார் கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து தகவல் தெரியவந்தது. இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

சென்னை பூந்தமல்லி அடுத்த பாரிவாக்கத்திலிருந்து கண்ணபாளையம் செல்லும் சாலையில் குப்பை கிடங்கு அருகே தலை மற்றும் இரண்டு கைகள் இல்லாமல் ஒரு ஆண் சடலம் எரிந்த நிலையில் கிடப்பதாக கடந்த மாதம் 25ம் தேதி திருவேற்காடு  போலீசாருக்கு தகவல் கிடைத்தது. விசாரணையில், மாங்காடு பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சிராஜூதீன் என தெரியவந்தது. இவர், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு விருகம்பாக்கத்தில் தனது கள்ளக்காதலி ஜூனத் என்பவருடன் சேர்ந்து துணை நடிகை ஒருவரை கொலை செய்து நகைகளை கொள்ளையடித்ததும் தெரியவந்தது. இதையடுத்து சிராஜூதீனின் கள்ளக்காதலி ஜூனத்தை பிடித்து விசாரித்தபோது, சிராஜூதீனை கொலை செய்ததை ஒப்புக் கொண்டார்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில்;- சிராஜூதீனுக்கும், ஜூனத்துக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்த நிலையில் பணத்துக்காகவும், நகைக்காகவும் துணை நடிகையை கொலை செய்துள்ளனர். பின்னர் அந்த வழக்கில் இருவரும் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்துள்ளனர். ஜூனத்திடம், சிராஜூதின் பணம் நிறைய வாங்கியுள்ளார். மேலும் அடிக்கடி பணம் கேட்டும் தொந்தரவு கொடுத்துள்ளார். வாங்கிய பணத்தை ஜூனத் திருப்பி கேட்டதால், அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே, ஜூனத்திற்கு அதே பகுதியை சேர்ந்த மகேஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. சிராஜூதீன் குறித்து மகேஷிடம் ஜூனத் புகார் கூறியுள்ளார்.

அதன்படி சம்பவத்தன்று சிராஜூதீனும், மகேஷூம் மது அருந்தி விட்டு இருவரும் ஜூனத் வீட்டிற்கு வந்துள்ளனர். அப்போது ஜூனத்தின் மகள்களிடம் சிராஜூதீன் ஆபாசமாக நடந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மகேஷ், சிராஜூதீனை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் அவர் உயிரிழந்தார். இதையடுத்து, அவரது உடலை எப்படி அப்புறப்படுத்துவது என்று யோசித்துள்ளனர். பின்னர், தலை மற்றும் கைகளை தனித்தனியாக வெட்டி, உடலை எரித்து விட முடிவு செய்துள்ளனர்.

இதையடுத்து சிராஜூதீன் தலை, கைகளை வெட்டி பைக்கில் வைத்து எடுத்துச் சென்று திருமழிசையில்  எரித்தும், உடலை சிராஜூதீனின் ஆட்டோவிலேயே எடுத்து வந்து பாரிவாக்கம் பகுதியில் எரித்ததும் தெரியவந்தது. மேலும், சிராஜூதீன் தலை மற்றும் கைகள் எரிக்கப்பட்ட இடங்கள் குறித்து மகேஷ் சரியாக அடையாளம் கூறாததால் தலை, கைகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் டி.என்.ஏ. பரிசோதனை அடிப்படையில் சிராஜூதீன் உடல் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து ஜூனத், மகேஷ் இருவரையும் திருவேற்காடு போலீசார் நேற்று கைது செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

பள்ளி, கல்லூரி மாணவிகளை ஒரே நேரத்தில் கரெக்ட் செய்த இளைஞர்! கை குழந்தைகளுடன் 2 பேரும் கதறல்! இறுதியில் நடந்த ட்விஸ்ட்!
இதற்காக தான் கார் டிரைவர் ஹரீஷை கூலிப்படை ஏவி கொன்றேன்! மஞ்சுளாவின் சினிமாவை மிஞ்சிய பரபரப்பு வாக்குமூலம்!