
காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட நடுவீரபட்டு பகுதியை சேர்ந்தவர் விடுதலை சிறுத்தை கட்சியின் மாநில நிலமீட்பு பிரிவு துணை செயலாளர் முருகன். இவர் அப்பகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் 4ம் தேதி பேக்கரி ஒன்றில் பொருட்கள் வாங்கி கொண்டு இருந்த போது மர்ம நபர்கள் சிலர் அவரை கொலை வெறி தாக்குதல் மேற்கொண்டு அவரின் கை, கால்கள், முதுகு பகுதியில் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியுள்ளனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த தாம்பரம் மாநகர ஆணையரகத்திற்கு உட்பட்ட சோமங்கலம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து போலிசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில் தற்போது இச்சம்பவத்தில் தொடர்புடைய 3 பேரை கைது செய்து சோமங்கலம் போலிசார் விசாரணை மேற்கொண்டனர். இதில் மணிமங்கலம் பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி லெனின் கூட்டாளிகளான கோபி (எ) கோபிநாத் (வயது 33), விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பகுதி செயலாளர் வினோத் (வயது 35) மற்றும் எலியாப்பு (எ) விக்னேஷ் (வயது 21) ஆகியோரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளி வந்தன. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிலமீட்பு பிரிவு மாநில துணை செயலாளரான முருகன் கடந்த ஓராண்டில் சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இடம் வாங்கி விற்பனை செய்து வந்துள்ளார்.
வந்ததாகவும் அதற்காக முருகனிடம் பல முறை தங்களுக்கு கமிஷன் தர வேண்டும் என்று மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. மிரட்டலுக்கு பயந்த முருகன் கமிஷன் தருவதாக கூறி விட்டு ஏமாற்றி வந்ததாகவும் ஆகவே சிறையில் உள்ள பிரபல ரவுடி லெனினை சந்தித்து பகுதி செயலாளர் வினோத் கேட்டதற்கு முருகனை முடித்து விடும் படி லெனின் கூறியதால் முருகன் மீது கொலைவெறி நடத்தினோம் என்றும் காவல்துறைக்கு பயந்து தலைமறைவானோம் என 3 பேரும் ஒப்புக் கொண்டனர். இதையடுத்து 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்த சோமங்கலம் போலிசார் 3 பேரையும் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.
இவர்கள் மீது ஏற்கனவே கொலை மற்றும் கொலை முயற்சிவழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பாக திருப்பெரும்புதூர் பகுதி தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் மோசஸ் கொலை வழக்கில் எலியாப்பு தொடர்புடையவர் என்பது குறிப்பிடத்தக்கது. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில நிர்வாகி மீது கட்சியின் பகுதி செயலாளர் உட்பட 3 பேர் 40 நாட்களுக்கு பிறகு கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க : Vikram: பத்தல, பத்தல..விக்ரம் படத்துக்கு சவுண்ட் பத்தல.! கடுப்பான ரசிகர்கள்.. தியேட்டரில் ரகளை !
இதையும் படிங்க : பெண்கள் ஹாஸ்டலில் ரகசிய கேமரா..1,000க்கும் மேற்பட்ட வீடியோஸ்.. சிக்கிய ஹார்ட் டிஸ்க்.! போலீஸ் ஷாக் !